உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காத்திருக்கும் ஆச்சரியங்கள்; தினமலர் மெகா சர்வே வெளியானது

காத்திருக்கும் ஆச்சரியங்கள்; தினமலர் மெகா சர்வே வெளியானது

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு - இணை ஆசிரியர்

அண்மை காலத்தில், தமிழகம் இப்படி ஒரு தேர்தலை பார்க்கவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்ற நிலை மாறி, பல தொகுதிகளில் சுவாரசியமான மும்முனை போட்டி நிலவுகிறது. மக்கள் இதை எப்படி பார்க்கின்றனர்? இந்த மாற்றத்தை வரவேற்கின்றனரா? உள்ளிட்ட கேள்விகளோடு தேர்தல் அறிவிப்புக்கு பின், கருத்துக்கணிப்பு படிவங்களோடு அவர்களை சந்தித்தோம்.

எத்தனை பேரை சந்தித்தோம்? 88,000 பேரை சந்தித்தோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,- 40 லோக்சபா தொகுதிகள், 264 சட்டசபை தொகுதிகள், 3,000 பஞ்சாயத்துகள் என, நம் நாளிதழ் சார்பில் சுற்றித் திரிந்து கருத்துக்கணிப்பை நடத்தியது, ஜெ.வி.சி.ஸ்ரீராம் தலைமையிலான 'வின்னிங் எலக் ஷன்' கருத்துக்கணிப்பு குழு.இந்த பணி அவர்களுக்கும் சரி, நம் நாளிதழ் ஆசிரியர் குழுவுக்கும் சரி, மிகவும் சவாலாக அமைந்தது. தேர்தல் அறிவிப்புக்கும், ஓட்டெடுப்புக்கும் ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான அவகாசம் மட்டுமே இருந்தது ஒரு காரணம். குறுகிய காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று, ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தாக வேண்டும்.அவர்களில் ஒவ்வொருவரிடமும், 'நீங்கள் யாருக்கு ஓட்டுப்போடப் போகிறீர்கள்?' என்ற எளிமையான கேள்வி மட்டும் கேட்க வேண்டும் என்றால், பணி எளிதாக இருந்திருக்கும். ஆனால், ஒவ்வொருவரும் சொல்லும் பதிலுக்கு, காரண காரியம் என்ன? அவர்களின் பதிலுக்கும், அவர்கள் சிந்தை ஓட்டத்திற்கும் பொருத்தம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நபரிடமும் 20 கேள்விகள் கேட்டோம். அவற்றுக்கு பொறுமையாக பதில் சொன்ன, 88,000 பேருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஏன் 88,000 பேர்?

பணியை துவங்கும் போது, 40 தொகுதிகளுக்கும் தலா, 2,000 பேர் என்ற கணக்கில், 80,000 பேரை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கள நிலவரம், எங்கள் திட்டத்தை முழுதுமாக புரட்டிப் போட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும், 1,500 பேரிடம் கருத்து கேட்டு வரும்போதே, கள நிலவரம் மாறத் துவங்கியது.கணிப்பு துவங்கியபோது, பரவலாக தி.மு.க., ஆதரவு நிலவிய இடங்களில், போகப்போக, பரவலான மாற்றம் ஏற்பட்டு, எதிர்தரப்பில் ஒரு கட்சிக்கு ஆதரவு என்று சூழல் மாறியது. அதாவது, அதே இடங்களில் ஒரு வாரம் முன்பிருந்த கருத்து, அடுத்த வாரம் இல்லை என்ற நிலை உருவானது. இதுதான் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது.இதனால், சில தொகுதிகளில் மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சில தொகுதிகளில், கருத்துக்கணிப்பு நடந்த இடத்தை தவிர்த்து, வேறு இடங்களில் கூடுதல் நபர்களிடம் கருத்துக்கேட்டு, மாற்றத்தை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அனைத்திற்கும் மேலாக, கடைசிநேர குட்டி கருத்துக்கணிப்பு, அனைத்து தொகுதிகளிலும் நடத்த வேண்டி இருந்தது.இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் கூட, சில தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடியாத நிலையில் உள்ளது. அதனால், நம் நாளிதழின் கருத்துக்கணிப்பு தான் கடைசி வாரம் வரை நடத்தப்பட்ட, ஒரே மெகா கருத்துக்கணிப்பு என, ஐயமில்லாமல் சொல்லலாம்.இப்போதும், கள நிலவரம், கடைசி இரண்டு நாட்களில், 3ல் இருந்து 5 சதவீதம் வரை மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத்தான் எங்களுக்கு தெரிகிறது. இந்த மாற்றம் யாருக்கு லாபம் என்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில், போட்டி அவ்வளவு கடுமையாக இருக்கிறது. இந்த தேர்தல், வலுவானோருக்கும், வேலை செய்வோருக்குமே வெற்றியை தரும்.வரும் பக்கங்களில், 15 தொகுதிகளின் நிலவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை, 15 தொகுதிகள், நாளை மறுநாள் 10 தொகுதிகள் என, பிரித்துப் பிரசுரிக்கப்படும். இது தொடர்பான விரிவான விவாதத்தை, எங்கள் 'யு டியூப்' சேனல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பார்க்கலாம்.இதெல்லாம் பெரும் பொருட்செலவில், மண்டை காயும் வேலையாக செய்யப்பட்டு இருந்தாலும், வாசகர்கள், இது வெறும் கணிப்பு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி கொண்டே இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிறு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த சிறு மாற்றமும் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் நிலையில் தான் சில தொகுதிகள் இருக்கின்றன.சரி, கருத்துக்கணிப்பு சாராம்சமாக என்ன சொல்கிறது? இதற்கான பதில், படத்தில் சூசகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து விறுவிறுப்பான முடிவுகளை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ipaper.dinamalar.com/detail.php?id=16398&c=Special_page&d=15-Apr-2024

15 தொகுதிகள் விவரம் பார்க்க

15 தொகுதிகள் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற முழுவிவரம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.specials.dinamalar.com/therthalkalam/index

வீடியோவில் காண...

https://youtu.be/gGnnNaJydu0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 81 )

Mahesh Kumar
ஏப் 16, 2024 10:16

எஸ் கரெக்ட்


Sivaswamy Somasundaram
ஏப் 16, 2024 07:07

மக்கள் அதிகம் பேர் படிக்கும் பத்திரிக்கை மக்களின் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தி மடைமாற்றும் கருத்துத்திணிப்பு வாக்காளர்களைச் சிந்திக்க விடுங்கள்


Kasimani Baskaran
ஏப் 16, 2024 06:27

பாஜக எப்படியும் தமிழக பாராளுமன்ற இடங்களை வைத்து மட்டுமே அகில இந்திய அளவில் ஜெயிக்கப்போவதுமில்லை - அதே போல அத்தனையும் ஜெயித்தாலும் காங்கிரசோ அல்லது அதன் கூட்டணிகளோ தீம்காவுக்கு மணிமகுடம் சூட்டவும் போவதில்லை ஆகவே இதிலிருந்து பாஜக கனிசமாக சட்டசபை தொகுதிகளை பெற எப்படி, எந்த அளவுக்கு உழைக்க வேண்டியது தெரியும் கூடுதலாக உள்ளடி வேலை செய்தவர்களை கட்சியை விட்டு நீக்கவும் உதவும் பணம் கொடுத்து தீம்கா ஜெயிக்க முயல்வதும், எடப்பாடியின் தீம்கா ஆதரவும் வெட்ட வெளிச்சமாகி மக்களிடையே ஒரு வித வெறுப்பையும் கூட விதைக்கும் ஆகவே இந்தத் தேர்தல் பாஜக தனது வியூகங்களை மாற்றியமைக்கவோ அல்லது மாநில அளவில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவோ உதவும்


ramani
ஏப் 16, 2024 06:15

சர்வ நிச்சயமாக பாஜக பல தொகுதிகளில் வென்று திராவிஷ கட்சிகளுக்கு அதிர்ச்சி தரும்


Nagercoil Suresh
ஏப் 16, 2024 03:40

புலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க ஆனா புலி வேற வழிய காட்டிட்டு போயிரிச்சி, சரி அங்கே தான் போய் பார்ப்போமுனு பார்த்தா டெஸ்ட் மேட்ச் நடக்குது ஆட்கள் கூடினால் தானே கால் நடையாய் நடந்ததற்கு உயிரோட்டமாக அமையும், நல்ல முயற்சி பாராட்டுக்கள்


Abi
ஏப் 16, 2024 01:56

தமிழ் நாட்டில் பிஜெபி கணிசமான தொகுதியில் வெற்றி பெறும் இந்த கருத்து கணிப்பு வெறும் ௦ மக்களிடம் இருந்து பெற பட்டது


Jayaraman Pichumani
ஏப் 16, 2024 01:43

பதினைந்திலும் திமுகவே ஜெயிக்கும்? என்னதான் ஊழல், விலைவாசி உயர்வு வாக்குறுதியை நிறைவேற்றாதது என்றெல்லாம் மக்கள் அதிருப்தியாக இருந்தாலும் திமுகவுக்கே வாக்களிப்பார்களா? எதற்காக வெறும் பதினைந்து? நாற்பதிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிதான் ஜெயிக்கும் என்று சொல்லி விடுங்கள்


Elangovan KANNAN
ஏப் 16, 2024 10:02

Wait and see up to th June


venkat raman
ஏப் 15, 2024 23:12

பரவாயில்லை துட்டு வாங்கிட்டீங்களா


Velan Iyengaar
ஏப் 15, 2024 22:00

சப்பை என்ற பொருளில் ஒன்றியத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி இருப்பதை பார்க்கும் போது இதில் உள்ள தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகளில் % க்கு மேல் மீதி எல்லா தொகுதிகளிலும் % க்கு மேல் ஒன்றியத்தின் செயல்பாட்டை சப்பை என்று கருத்து கூறி இருக்கிறார்கள் இப்போ சொல்லுங்க எத்தனை இடங்களில் பிணை தொகை போகும் என்று ஒரு சாதாரண கணக்கு போட்டாலே தெரியவில்லையா ?? பெரிய புள்ளியியல் அறிவு தேவையில்லை ஹா ஹா ஹா ஹா


J.Isaac
ஏப் 15, 2024 21:33

எனக்கு பெரிய ஆச்சரியம், ஆரூர் கருத்து இல்லாதது தான்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ