உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கைகளில் முக்கியமானது, மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்ய அனுமதித்து பணப்பலன் வழங்க வேண்டும் என்பது தான்.இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெற முடியும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=195mp71a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!

* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.* இலங்கை தமிழர் நலனுக்காக 3 ஆயிரம் வீடுகள் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.* கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு* பழமையான தேவாலயம், தர்காக்களை புதுப்பிக்க தலா ரூ.10 கோடி* புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி* 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.* மாநில அரசின் ஆண்டு வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும்* வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.* வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாகுறை விகிதம் குறையும்.* 5 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.* நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.* 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Varadarajan Nagarajan
மார் 14, 2025 19:04

இந்த பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நடத்த ஆயத்தமாகிவிட்டது. எனவே எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அவர்களை சமாதானப்படுத்தும்வகையில் அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்புகள் வரும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அவர்களுக்கும் குறைவில்லாமல் இதர வருமானங்கள் வருவதால் இந்த அறிவிப்பை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை


saravan
மார் 14, 2025 17:49

அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாம்...இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்...


Nedumaran
மார் 14, 2025 16:20

அனைத்து திட்டங்களுமே கோடியில் தான். பணம் மொத்தமும் கபளீகரம் ஆவது மட்டுமே உண்மையில் நடக்கப் போகிறது.மக்களுக்கும் எந்த ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை.


Govindan
மார் 14, 2025 15:57

Total working days 210


Ravikumar perumal
மார் 14, 2025 13:49

Nice


தத்வமசி
மார் 14, 2025 13:18

சரி. அரசு ஊழியர்களுக்கு இப்போதே தேர்தலுக்கான தொகை கிடைத்து விட்டது. இனி அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தமிழகத்தை அடிமை சாசனம் எழுதி கொடுத்து விடுங்கள். எதைப் பற்றியும் கவலை கிடையாது. எரிகிற வீட்டில் புடுங்கியது லாபம். நாடு எப்படி வளரும் ?


Subburamu Krishnasamy
மார் 14, 2025 12:54

Most of the budget allocation is meant for looting by rulers netas. Unproductive budget, there is no mention about developments


Natarajan Ramanathan
மார் 14, 2025 12:46

வருஷம் பாதிநாட்கள்கூட பணி செய்யாத ஆசிரியர்களுக்கு எதற்கு மற்ற விடுமுறைகள் தரவேண்டும்?


bairavarsaranam gmg
மார் 14, 2025 12:39

பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடிக் கொண்டியிருக்கிறார்கள் ,தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்பு என்னாச்சு பாவம் எப்போதுதான் விடிவுகாலம் வருமோ , ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் கேள்வி கேட்கவேண்டும் புண்ணியமாக போகும்


karthik
மார் 14, 2025 12:33

தெரிந்தது தானே...அரசு ஊழியர்கள் குறிப்பாக வாத்தியார்கள் தானே திமுகவின் ஓட்டு வாங்கி.. அவர்களை தவிக்க விடுவாரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை