உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், உதவியாளர் கைது

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், உதவியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே பட்டா மாறுதலுக்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர், அவரது உதவியாளர் இருவர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்தவர் சுரேஷ். இவர், தன் அத்தை கெம்பம்மாவிற்கு பாகமாக கிடைத்த, 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் உட்பிரிவு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். நீண்ட நாட்கள் ஆகியும் பட்டா மாறுதல் உட்பிரிவு செய்யப்படவில்லை.பணியை விரைந்து முடிக்க, கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த, வேப்பனஹள்ளி சர்வேயர் ஜெயகாந்த், சுரேசிடம், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயுடன் நேற்று மாலை சுரேஷ், வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலகம் அருகே சென்றுள்ளார். அங்கு நின்ற சர்வேயர் ஜெயகாந்த், 29, பணத்தை வாங்கி தன் உதவியாளர் திலீப்குமார், 29, என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., நாகராஜன், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கூமூட்டை
பிப் 19, 2025 10:12

பாவம் மாட்டிக் கொண்டு விட்டார். எத்தனை பேர் தேவை என்றால் எல்லா அரசு ஏஜன்சிகள்


கோபு
பிப் 19, 2025 07:20

படத்துலே மூவாயிரம்தானே தெரியுது? நாலாயிரம் லஞ்சம் வாங்கிருக்காரு. அதுக்குள்ளேயே ஆயிரத்தை அமுக்கிட்டது யாரு?


Bhaskaran
பிப் 19, 2025 05:42

இவனுங்க மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்கறாங்களா இல்லையா தினமும் பல லஞ்சப்பயலுவ பிடிபடறானுக எவனும் தண்டனை டிஸ்மிஸ் ஆன மாதிரி தெரியவில்லை.ஒருவேளை அரசு விதிகளின்படி லஞ்சம் வாங்கி பிடிபட்டால் மட்டுமேபதவி உயர்வு என்று மாற்றம் செய்திருக்கிறார்களோ


muthu
பிப் 19, 2025 00:24

In china those getting bribe will be hanged in public. Let Tamilnadu brings that legislation in assembly to control bribery


Anu Sekhar
பிப் 18, 2025 22:43

லஞ்சம் என்று ஒரு பிரிவை ஆரம்பியுங்கள். இந்த ஊழல் காரர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள். கடுமையான தண்டனை கொடுங்கள். எப்பவாவது திருந்துகிறார்களா இந்த கொள்ளை காரர்கள் என்று பார்ப்போம். மக்கள் இவர்களை கட்டிக்கொடுங்கள்.


Sivak
பிப் 18, 2025 22:43

எந்த அரசியல் கட்சியாவது இந்த லஞ்சத்தை ஒழிக்கறோம்னு சொல்றாங்களானு பாருங்க ... லஞ்சம் வாங்கும் அரசு பணியாளர்களை உடனடி பணி நீக்கம் செய்யறோம்னு தேர்தல் வாக்குறுதி குடுக்க சொல்லுங்க பார்ப்போம்


Matt P
பிப் 18, 2025 22:22

லஞ்சம் வாங்கி தப்பித்து சொகுசு வாழ்க்கை வாழ்வது எப்படி என்று இன்னும் சுதந்திர நாட்டில எவனும் புத்தகம் எழுதலையா? எழுதியிருந்தால் அதை படிச்சிட்டு வாங்குக்கப்பா ..உங்களை எல்லாம் ஒரு பக்கம் தவறாக நினைத்தாலும் பரிதாபமா இருக்கு. எல்லாம் குடும்பத்துக்கு தான். இப்போ குடும்பத்துக்கே மன உளைச்சல். படித்தும் வேலை கிடைக்காது பலர் இருக்கும் போது வேலை கிடைத்த பிறகு இதெல்லாம் தேவையா? லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்திருக்கலாம். லஞ்சம் கொடுக்க போகும் பணத்தை வைத்து முடிந்தால் சுய தொழில் செய்யுங்க. சிந்தித்து செயல் படுங்க. சிந்திப்பதற்கு மூளையை இயற்கை பாதுகாப்பான கடினமான மண்டை ஓட்டை வைத்து பாதுகாக்கிறது. கையும் காலும் அப்புறம் தான்.


Oru Indiyan
பிப் 18, 2025 21:47

என்னங்க அநியாயம்...4000 கோடி லஞ்சம் வாங்கின திராவிடிய பசங்க பென்ஸ் காரில் 4 காவல்துறை அதிகாரிகள் துணையுடன் ஜாலியா ஊர்வலம் போராங்க.


Bye Pass
பிப் 18, 2025 21:35

அம்பத்தூர் ரெயில் விகார் காலனி அமைந்துள்ள இடத்துக்கு இன்று வரை பட்டா தராமல் அலைக்கழிக்க விடுகிறார்கள் ..காலனிக்கு வரும் பாதை நீர் வரப்பு பகுதி என்று சாலை வசதி அமைத்து தரவில்லை ..காலனி மக்கள் சொந்த பணத்தில் சாலை அமைக்கவும் அனுமதி கிடையாது .. CMDA எப்படி வீடு கட்ட அனுமதி கொடுத்தார்கள் ? இந்த மாதிரி வேலைகளை TCS அல்லது இன்போசிஸ் கம்பெனிகளிடம் ஒப்படைக்கலாமே


Ramesh Sargam
பிப் 18, 2025 20:39

கடந்த சில நாட்களாக அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் செய்தி வந்த வண்ணமிருக்கிறது. இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்தே நடக்கிறதா, அல்லது தெரியாமல் லஞ்சம் வாங்குகிறீர்களா? முதல்வர் லஞ்சத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் இதுவரையில்? எப்பொழுதும் மொழி பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார். லஞ்சத்தை ஒழிக்கவும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கவும் முதல்வர் எந்தவித ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது வருத்தமான ஒன்று.


Matt P
பிப் 18, 2025 23:04

முதல்வருக்கு அவரது வருமான வரவை பார்பதற்க்கே நேரம் இருக்காது.


Raj S
பிப் 19, 2025 00:00

தல சூட்டிங்க்ல பிஸியா இருக்காப்ல...


Raj S
பிப் 19, 2025 00:01

தல சூட்டிங்க்ல பிஸியா இருக்காப்ல...


புதிய வீடியோ