செயற்கை நுண்ணறிவில் இயங்கும் 2026 மாடல் டைகின் ஏசி அறிமுகம்
சென்னை: ' ஏசி ' உற்பத்தி செய்யும் ஜப்பானை சேர்ந்த, 'டைகின்' நிறுவனம், மின்சார செலவை குறைக்கும், புதிய 2026 மாடல் ' ஏசி ' க்களை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில், வி.ஆர்.வி., ஆல்பா சீரிஸ் என்ற செயற்கை நுண்ணறிவில் இயங்கும், ஸ்மார்ட் ' ஏசி ' யும் விற்பனைக்கு வந்துள்ளது. வானிலை மற்றும் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிப்பது, 'கம்ப்ரஷர்' மற்றும் குளிரூட்டும் திறன் மேம்பாடு, நவீன காற்று சுத்திகரிப்பு வசதி ஆகியவை, இவற்றின் சிறப்பம்சங்கள். இந்த மாடல் ' ஏசி ' க்கள், 2026ம் ஆண்டு தரநிலைகளின்படி, நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குறைந்த மின்சார செலவு மற்றும் சத்தத்தை வெளிப்படுத்தும், ஐந்து ஸ்டார் ' ஏசி ' மாடல்களில், இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி உள்ளது. இது குறித்து டைகின் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கன்வால்ஜீத் ஜாவா கூறுகையில், 'எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அதி நவீன, நம்பகமான மற்றும் மின்சேமிப்பு திறன் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் உறுதியுடன் உள்ளது' என்றார். இந்நிறுவனம், இந்தியாவில் இதுவரை, 2,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இங்கு, இரு ஆலைகள், மூன்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளது. வரும் ஏப்., முதல், ' ஏசி ' மாடல்களை பொறுத்து, 7 முதல் 12 சதவீதம் வரை விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.