உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேன்ட் சரியாக தைக்காத டெய்லர் குத்திக்கொலை

பேன்ட் சரியாக தைக்காத டெய்லர் குத்திக்கொலை

நாகர்கோவில் : பேன்ட் சரியாக தைத்துக் கொடுக்காததால், நாகர்கோவிலில் கடைக்கு உள்ளே புகுந்து டெய்லர் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே திட்டு விளையை சேர்ந்தவர் செல்வன், 60; டெய்லர். நாகர்கோவில், டதி பள்ளி அருகே பேலஸ் ரோட்டில் கடை நடத்தினார். நேற்று முன்தினம் இரவு, இவர் அவரது கடையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரிடம் துணி தைப்பதற்காக கொடுக்க வந்த போலீஸ்காரர் ஒருவர் இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தார். வடசேரி போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, சட்டை அணியாமல், 'ஹெல்மெட்' மட்டும் அணிந்து வெளியேறி, வாலிபர் பைக்கில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.ஏ.எஸ்.பி. லலித்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள், அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அடுத்த செய்துங்கநல்லுாரை சேர்ந்த சந்திரமணி, 37, என்பது தெரியவந்தது.நாகர்கோவிலில் உள்ள ஹோட்டலில் செப் ஆக வேலை பார்த்து வந்த இவர், தனக்கு பேன்ட் தைக்க செல்வனிடம் துணி கொடுத்திருந்தார். அவர் சரியாக தைத்து தரவில்லை என்று கூறி வாக்குவாதம் செய்தபோது, ஆத்திரத்தில் கத்திரிக்கோலை அவரது முதுகு, தலையில் குத்திக்கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். சந்திரமணி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Keshavan.J
மே 24, 2025 12:09

என்ன ஒரு அறிவிலி தனம் .. நல்லவேளை இவன் ஹோட்டலில் சாப்பிட வந்தவங்க சாம்பார் சரியில்லை என்று சொல்லியிருந்தால் என்ன கதி ஆகிருப்பாங்க


baala
மே 24, 2025 10:57

நீங்கள் போடும் கருத்துக்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம் என்பதை யோசிக்கவும்.


Varadarajan Nagarajan
மே 24, 2025 08:05

நிறைய மக்களுக்கு பொறுமை, அமைதி, மற்றவர்களையும் சமமாக மதித்தல், தனது மனைவி மற்றும் தாயைதவிர மற்றவர்களை சகோதரிகளாக பார்ப்பது போன்ற குணங்கள் மிக மிக குறைவாக உள்ளது. அதனால்தான் இதுபோன்ற சிறிய விஷயங்கள்கூட கொலையில் போய் முடிகின்றது.


Kasimani Baskaran
மே 24, 2025 07:45

அதான... மாடல் ஆட்சியில் ஒரு டெய்லர் கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை.... என்னங்கடா நடக்குது...


மணி
மே 24, 2025 05:17

இவன் மனுசனுக்க பொறந்தவனா இல்ல


முக்கிய வீடியோ