உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகம்

 தி.மு.க.,வுடனான பேச்சு சுமுகம்

தமிழக காங்.,கில் 43,000 பேர் பூத் கமிட்டிக்காக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 1,000 பேர் அடங்கிய குழுக்களை அமைத்து வருகிறோம். தேர்தலில், உத்தரவாதங்கள் என்பதை கர்நாடகாவில் காங்., தான் முதலில் அறிமுகப்படுத்தியது. இதை, முதலில் கேலி செய்த பா.ஜ.,வினர், பின் அதையே மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா என ஒவ்வொரு மாநிலங்களிலும் பின்பற்ற துவங்கினர். தமிழகத்தில் தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வெளிப்படையாக நடந்து வருகிறது. எங்கள் கூட்டணியில் சுமுகமாக பேச்சு நடந்து வருகிறது. அடுத்தகட்ட பேச்சுகள் எப்போது என்பது குறித்து அவ்வப்போது தெரிவிப்போம். - நிவேதித் ஆல்வா, மேலிட பொறுப்பாளர், தமிழக காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை