உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

கூடியது தமிழக சட்டசபை; மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) காலை 9.30 மணிக்கு கூடியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தங்கம் தென்னரசு மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று துவங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 17) காலை 9.30 மணிக்கு கூடியது. பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் எம்.எம்.ஏ., பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சி முன்னறிவிப்பு கொடுத்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தை எழுப்ப அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.தொகுதி மறுவரையறை உட்பட சில பிரச்னைகளில், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே, ஒன்றரை மாதங்களுக்கு சட்டசபையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
மார் 17, 2025 19:42

தமிழக சட்டசபை தீர்மானங்களை நாய்கூட மதிக்காது.


Saran
மார் 17, 2025 11:45

Whenever i watch our politicians in the assemby, i think about the Tamil film vilains. We are electing almost the worst people to rule our state and country. Please in 2026, elect the people based on thier personnel qualification, knowledge and criminal records. Think about our future generation, we need Good gouvernment Hospitals, schools, proper water and free pollution cities. Cancer becomes a commun desease but it is very very difficult moment for the Family.


अप्पावी
மார் 17, 2025 10:45

இறந்தவர்களுக்கு தீர்மானம் போட்டுட்டு வீட்டுக்குப் போய் பிரியாணி சாப்புடுவாங்க.


Anand
மார் 17, 2025 10:37

அடுத்ததாக, ... ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு புகழ் பாடும் நிகழ்ச்சி நடைபெறும்... கொண்டான், வென்றான் போன்ற பட்டங்களும்...