உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்.14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!

அக்.14ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை!

சென்னை: தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: அக்டோபர் 14ம் தேதி சட்டசபை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில், மறைவுற்ற முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும், உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக, ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர் கேள்வி: தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தியாவிலேயே அரசியல் செய்யும் சபாநாயகர் ஒருவர் என்றால் அது அப்பாவு தான் என கூறியுள்ளாரே?அப்பாவு பதில்: அரசியலில் ஓட்டு வாங்கி தானே எம்.எல்.ஏ ஆகி, சபாநாயகர் ஆகி இருக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kulandai kannan
செப் 23, 2025 19:31

கூடி????


Vasan
செப் 23, 2025 22:03

கூடி, சில மணி நேரத்தில் கால வரையின்றி ஒத்தி வைக்கத்தான்.


sankaranarayanan
செப் 23, 2025 17:15

அப்பாவிற்கு ஓர் அப்பாவு எப்படி நேர்ந்துள்ளது மக்களே பாருங்கள் எல்லாமே ஒரு கோமாளி கும்பல்


தமிழ் மைந்தன்
செப் 23, 2025 16:09

இந்த முறை கோமாளியும் வெளிநடப்பு சொய்யலாம்


Vasan
செப் 23, 2025 14:46

Appa will be praised by Appavu.


duruvasar
செப் 23, 2025 13:04

அப்பாவு அய்யா ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக சுழன்று ஆடும் ஆட்டத்தை காணலாம் . தொழில் நுட்ப கோளாறு தொடரும் என எதிர்பார்க்கலாம். மைக் ஸ்விட்சை ஆன் செய்து ஆப் செய்யவே நேரம் சரியாக இருக்கும்.


Indian
செப் 23, 2025 12:11

முதல்வரை பாராட்டி தள்ளிருவாங்க


Anand
செப் 23, 2025 12:09

சபையில் ஆளாளுக்கு விடியல் / சின்ன விடியலின் வரலாற்று சாதனைகள் என கோபம் வருகிற மாதிரி காமெடி செய்து புளங்காகிதம் அடைவர்.


சமீபத்திய செய்தி