உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கதை, திரைக்கதை, வசனத்தை மிஞ்சும் வேங்கைவயல் குற்றப்பத்திரிகை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனத்தை மிஞ்சும் வேங்கைவயல் குற்றப்பத்திரிகை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம்

திருப்பூர்: ''வேங்கைவயல் விவகாரத்தில் கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தை மிஞ்சும் அளவுக்கு, தமிழக போலீஸ்துறையின் குற்றப்பத்திரிகை உள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.திருப்பூர், கணக்கம்பாளையத்தில் அண்ணாமலை நேற்று கூறியதாவது:வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உட்பட அனைத்து பா.ஜ., தலைவர்களின் ஒரே நோக்கம், பா.ஜ.,வை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்று, 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைப்பது தான். அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.இன்றைக்கு தி.மு.க., நாடக கம்பெனி போலாகிவிட்டது. வேங்கைவயல் விஷயத்தில், கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தை மிஞ்சும் அளவுக்கு, போலீசாரின் குற்றப்பத்திரிகை உள்ளது. சம்பவம் நடந்து, 900 நாட்களுக்கு பின், யாரும் நம்ப மாட்டார்கள். இத்தனை நாட்களாக இல்லாத ஆடியோ, வீடியோ திடீரென வெளியே வருகிறது.உள்ளத்தில் பயமில்லை என்றால், எதற்காக சி.பி.ஐ., விசாரணையை தடுக்கிறீர்கள்? கூட்டணியில் உள்ள திருமாவளவன், கம்யூ., கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, வேங்கைவயல் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதற்காக இந்த கண் துடைப்பு? எதற்கு இத்தகைய போலித்தனம்? தி.மு.க., அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.திருப்பூர் புத்தகத்திருவிழாவில், மேடை ஏறி, மைக்கை பிடித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறுவது, ஊடகங்களில் இடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இவற்றை எல்லாம் பொருட்படுத்தக்கூடாது.இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ