உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு

காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ.,வில் துணை தலைவர் பதவிகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்துமாறு, கட்சி மேலிடத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதிருப்தியாளர்களுக்கு பதவிகள் தரும் நோக்கில் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டாலும், காங்கிரசை போல கோஷ்டிகள் அதிகமாகும் அபாயம் இருப்பதாக பா.ஜ., தொண்டர்கள் கருதுகின்றனர்.தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடப்பதால், அதிருப்தியில் உள்ள கட்சியினரை திருப்திப்படுத்த தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதற்காக, ஏற்கனவே மாநில துணை தலைவர் பதவியில் 10 இடங்கள் உள்ள நிலையில், கூடுதலாக இருவரை நியமிக்க அனுமதிக்குமாறு, மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலிடம் சம்மதிக்காததால், பட்டியல் வெளியீடு தாமதமாகிறது.அதிருப்திதமிழக பா.ஜ.,வில் தலைவர் பதவிக்கு அடுத்து 10 துணை தலைவர்கள், 10 மாநில செயலர்கள், நான்கு பொது செயலர்கள், ஒரு பொருளாளர், ஒரு இணை பொருளாளர், ஒரு அலுவலக செயலர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த முறை கூடுதலாக ஒரு பொதுச்செயலர், இரு மாநில செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.பா.ஜ.,வில் பல ஆண்டுகளாக இருக்கும் சிலர் அதிருப்தியில் உள்ளனர். கட்சியிலும் அவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை; மத்திய அரசிலும் எந்த பதவியும் கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களும் பதவி கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால், பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களை திருப்திபடுத்த, மாநில பதவிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, துணை தலைவர் பதவிகளை, 10க்கு பதில் 12 ஆக உயர்த்துமாறு, மேலிட தலைவர்களிடம் தமிழக பா.ஜ., பொறுப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோஷ்டிகள்அதை மேலிடம் ஏற்க தயக்கம் காட்டுகிறது. ஆனாலும், தமிழகம் பெரிய மாநிலம் என்பதால், தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள 12 துணை தலைவர் பதவிகளுக்கு ஒப்புதல் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.தமிழக பா.ஜ., வட்டாரம் கூறியதாவது:கடந்த ஆண்டில், ஒரு பொதுச்செயலர், இரு மாநில செயலர்கள் என, மாநில நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல எண்ணிக்கையை உயர்த்த அனுமதி கேட்கப்படுகிறது.இப்படி ஆண்டுதோறும் அதிகரித்து செல்வது சரியல்ல. இப்படி செய்தால், காங்கிரஸ் கட்சியை போல தமிழக பா.ஜ.,வும் கோஷ்டிகள் நிறைந்ததாக மாறிவிடும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூன் 27, 2025 11:17

இன்னொரு பத்து,இருபது சேர்த்துக் கொடுத்தால் எல்லோருக்கும் கொடுத்தது போல் ஆகிவிடுமே, பிறகு சண்டையே வராது!


Mettai* Tamil
ஜூன் 27, 2025 15:57

நீங்க சொல்றது கரெக்ட் தாங்க ..அப்படியே திரும்பி பாருங்க .ஒரு மூணு தலைமுறையா ஒரு கட்சி தலைவர் பதவிகூட வாங்க முடியாம அடிமையாகவே வாழ்ந்திட்டு போற அந்த நம்ம ஆளுங்களுக்கும் ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க உங்களுக்கு புண்ணியமாப்போகும்


Oviya Vijay
ஜூன் 27, 2025 08:36

கட்சிக்கு வெளியே நடக்கும் தேர்தல்களில் எப்படியும் பாஜக ஜெயிக்கப் போவதில்லை என நன்கு தெரிந்து கொண்டு கட்சிக்கு உள்ளேயாவது பதவிகள் கிடைக்காதா என்ற ஒரு அல்ப ஆசை தான்... வேறு என்ன... மேலிடம் இதனைப் புரிந்து கொண்டு அனைத்து நிர்வாகிகளுக்கும் மாநிலத் தலைவர் பதவி கொடுக்குமாறு தமிழகத்தில் இருக்கும் 177 பாஜக தொண்டர்கள் அனைவரின் சார்பாக பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...


Saai Sundharamurthy AVK
ஜூன் 27, 2025 07:23

உண்மையில் அமித்ஷாவின் நோக்கம்.. இந்த துணைத் தலைவர்கள் எந்த கட்சியுடன் ரகசிய உறவு வைத்திருக்கின்றனர்? யாரெல்லாம் பாஜகவுக்கு விசுவாசமாக உள்ளனர்? அவர்களுக்கு கட்சியை வளர்க்கும் திறமை உள்ளதா? எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு சரியான விளக்கத்துடன் பதிலடி தருகின்றனரா? அல்லது காங்கிரஸ் கட்சியினர் போல் ஏதோ சீட்டு, பதவி கிடைத்தால் போதும் என்கிற மனநலம் குன்றிய சோம்பேறிகளாக உள்ளனரா? என்று சோதித்து பார்த்து விட வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.