உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வலுத்தது பழுக்குமா, வதந்தி நிஜமாகுமா; இன்று மாலை முடிவு தெரியும்

வலுத்தது பழுக்குமா, வதந்தி நிஜமாகுமா; இன்று மாலை முடிவு தெரியும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆகஸ்ட் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதில் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, இன்று(ஆகஸ்ட் 22) மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ornuf6i1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது ஸ்டாலின் உடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மூத்த அமைச்சர் ஒருவர், வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 3 புதியவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. இலாகா மாற்றம் பெரியளவில் இருக்கும். முக்கிய அமைச்சர்களின் இலாகா மாற்றமும் பெரிய அளவில் இருக்கும் என்றும் கோட்டை வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

உதயநிதிக்கு என்ன பொறுப்பு

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய பொறுப்புகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நிருபர்கள் கேள்விக்கு, கோரிக்கைகள் வலுத்துள்ளன. இன்னும் பழுக்கவில்லை என சூசகமாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஆக 22, 2024 12:18

பிஞ்சிலே பழுக்க முடியாது. அதை வெம்பிப்போனது என்றுதான் கூறுவார்கள். அதில் சுவை இருக்காது. அதுபோலத்தான் உதய நிதியும்...


Barakat Ali
ஆக 22, 2024 11:36

முதல்வருக்கான பணிகளை தான் இல்லாத நிலையில் கவனித்துக் கொள்ள நம்பிக்கையானவர் உதயநிதி மட்டுமே என்று முதல்வர் நினைக்கிறார்... அதாவது அரசு நிர்வாகமே ஒரு குடும்பத்தைத் தான் நம்பியுள்ளது ...... இந்நிலை மிகவும் ஆபத்தானது .....


mindum vasantham
ஆக 22, 2024 11:29

உதயநிதி சீமானுடன் ஒரு விவாதம் நடத்த முடியுமா


ஆரூர் ரங்
ஆக 22, 2024 11:27

மகனுக்கும் ஒன் வே டிக்கட் வாங்கி அழைத்துச் சென்று விடுங்க. திரும்ப வரவேண்டாம்.


Ramanujadasan
ஆக 22, 2024 10:50

வெம்பல்கள் எல்லாம் சுவை மிகு கனிகள் ஆகாது


karutthu
ஆக 22, 2024 10:43

நீங்கள் இளவரசருக்கு பட்டம் சூட்டிவிட்டு அமெரிக்காவிற்கு சென்று விடுங்கள் அதுதான் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது


அப்பாவி
ஆக 22, 2024 10:10

தானா கனியாது. தடியால் மத்தவங்களை அடிச்சு இதைப் பழுத்தது மாதிரி ஆக்கிடுவாங்க. அடிக்கிற அடியில் எல்லாரும் கதறிக்கிட்டு ஒத்துக்கணும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ