உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: 6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று முதல்வர் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அமைச்சர் கூறியதாவது: சென்னையைச் சுற்றியுள்ள பெல்ட் ஏரியா எனப்படும் 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கி.மீ., தொலைவுக்குள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் 6 மாதத்திற்கு பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bn4h5ohl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும். மதுரை, நெல்லை போன்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்ற பிரச்னைகள் நிலவுகிறது. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் தீர்மானத்தை இன்றைய அமைச்சரவையில் முடிவெடுத்து, 6 மாதத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில், பட்டா கோரி விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், அதனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு இதுவரையில் பட்டா வழங்கியுள்ளோம். 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் பணியும் செய்து வருகிறோம். அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால், தாலுகா வாரியாக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Kanns
பிப் 11, 2025 11:03

Recover Entire Costs of All Freebies/Concessions 90% UnDue Vote Briberies from All Such Ruling Parties-Leaders-Cadres Besides Strictly Banning-Arresting-Punishing Such Parties/ Leaders for Causing Loss to Nation& Removing Voting-50%Citizen Rights of All Freeby Availers-Givers Until they Repay


சிட்டுக்குருவி
பிப் 10, 2025 19:39

பட்டா என்பது சொத்து பத்திரம் இல்லாதவர்களுக்கு மட்டுமே என்று இருக்கவேண்டும்.இது எல்லோருக்குமாக பரவலாக்கப்பட்டிருப்பது அந்த துறையின் லஞ்சம் குவிக்கும் அங்கமாக மாறிவிட்டது.இதைப்பற்றி அரசு மாற்றியோசிக்கவெண்டும்.மக்கள் பெரும்பாலும் பட்டாவுக்காக அலைக்கழிக்கபடுகின்றார்கள்.லஞ்சம் இல்லாமல் முடிவதில்லை.நாட்டில் எத்தனையோ முன்னேற்றங்கள் நடுந்துகொண்டிருக்கும்போதுஇதிலும் மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.முதலில் பத்திரம் உள்ளவர்களுக்கு பட்டா தேவையில்லை என்று சட்டமோ அல்லது அரசு ஆணையோ கொண்டுவரவேண்டும்.இது சாத்தியப்படாது என்றால் பத்திரப்பதிவு துறை பத்திரம் பதிந்த அன்றே கம்யூட்டர் மூலம் பட்டா கொடுப்பதற்கு தேவையான தரவுகளை தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி ,பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பட்டதாரருக்கு பட்டா சென்றடைய நடைமுறைகளை மாற்றியமைக்கலாம்.மக்கள் பட்ட்டாவிற்காக அலையவிட கூடாது.


திகழ் ஓவியன்,Ajax,Ontario
பிப் 10, 2025 19:28

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தானம். நம் வரிப்பணத்தை வீணடித்து ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும் கேடு கெட்ட நிலை...


என்றும் இந்தியன்
பிப் 10, 2025 16:56

பட்டா கொடுப்பது என்றால் என்ன??? புற..போக்கு நிலம் ஆக்கிரமிப்பு???அதற்கு பட்டா கொடுப்பது???அதை வாங்கி ஏழைகள் என்ன செய்வார்கள்??? 1-விவசாயம் செய்வார்களா??? 2-இல்லை வீடு கட்டுவார்களா??? 3-இல்லை திருட்டு திராவிட அறிவிலி விடியல் அரசியல் வியாதிகளுக்கு அவர்கள் சொல்லும் விலையில் கொடுப்பார்களா??? 3 வது நடக்கத்தான் இவ்வளவு வாய் ஜாலமா மாய் மாலமா???


Priyan Vadanad
பிப் 10, 2025 15:49

முதலமைச்சர் பிரதம அமைச்சரை காப்பியடித்து அவரைவிட பெரிய ஆளாகிவிடலாம் என்று நினைக்கக்கூடாது. எதில் காப்பியடிக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.


Laddoo
பிப் 10, 2025 15:48

//6 மாதத்தில் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில்// சும்மா அடிச்சு விட வேண்டியதுதான், யாரு கேக்கப் போறா? பத்துத் தோல்வி ஏதாவது அதிகப் பேசப் போய் அந்த கொலை கேசு பைலை ஸ்டாலின் எடுத்தித்தி ட்டா நம்ம கதி என்னாவது என்று பயந்து நடுங்குகிறார்.


Priyan Vadanad
பிப் 10, 2025 15:46

தாம்பரம் மாநகராட்சியானபின் ஒருசில ஏரியாக்கள் இன்னும் பட்டா கணினி மயமாகவில்லை. கணினி பட்டா இல்லை என்று காரணம் காட்டி பதிவு செய்ய மறுக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நிர்வாகம் இருக்கிறது. அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று பொய்கள். ஏமாற்றுவது அரசியல்வாதிகளாக அல்லது அதிகாரிகளாக இருந்தாலும் ஏமாறுவது இவர்களை நம்பும் மக்களே.


Nandakumar Naidu.
பிப் 10, 2025 14:49

முதலில் வந்தேறி தீவிரவாதிகளுக்கும், தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிகளும் பட்டா கொடுங்கள், நாடும், நம் மாநிலமும் உருப்படும். இளிச்ச வாய் ஹிந்துக்கள் உங்களுக்கு வாக்களித்துக்கொண்டிருப்பார்கள்.


GMM
பிப் 10, 2025 14:25

சென்னை பெல்ட் ஏரியா வில் 32 கி. மீ. வரை ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை முடிவு. இது போன்ற குறைபாட்டு முடிவை யாரும் எதிர்க்க மாட்டார்கள். தமிழக கவர்னர் அமைச்சரவை செய்வதை ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் சாட்சி கையெழுத்து போடும். அடமானம் , கிரயம் செய்யத்தான் பட்டா வேண்டும். குடியிருக்க பட்டா வேண்டுமா?. இலவச பட்டா பெற்ற கட்சியினர் இடம் மறு விற்பனை செய்து, கட்சி முக்கியஸ்தர்களும் ஓட்டல், விடுதி கட்டி பயன் பெறுவர். சர்வாதிகாரி. யாரும் எதிர்க்க முடியாது. ஆக்கிரமிப்பு நபருக்கு பிற இடங்களில் நிலம் இருப்பது தெரிய வராது. சில ஊர்களில், பத்திர பதிவு கொண்டு, பட்டா வழங்க, வருவாய் ஊழியர் நேரடி ஆய்வும் நடக்கிறது. தமிழகம் அதிக நில பதிவு குறைபாடுடைய மாநிலம்.


ஆரூர் ரங்
பிப் 10, 2025 13:20

நிறைய அமைச்சர்கள் பள்ளிப் படிப்பை தாண்டாத அறிவாளிகள். அரைப்பக்க அறிக்கையை ஒரு மணிநேரம் படிப்பவர்கள். மத்திய பட்ஜெட்டையே முழுமையாக பார்க்காத அறிவாளிகள். மாநில அரசின் பட்ஜெட் எப்படியிருக்கும்?.


புதிய வீடியோ