உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழகம் : முதல்வர் இன்று துவக்குகிறார்

ஓரணியில் தமிழகம் : முதல்வர் இன்று துவக்குகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., அறிவித்துள்ள, 'ஓரணியில் தமிழகம்' திட்டத்தின்படி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி, இன்று துவங்குகிறது.மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில், பூத் அளவில் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரை, தி.மு.க.,வில் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று துவங்குகிறது.சென்னையில் இந்த நிகழ்ச்சியை, கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. செப்., 17க்குள், உறுப்பினர் சேர்க்கையை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கிடையே, 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, ஸ்டாலின் பேசி வருகிறார். கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், தினமும் மூன்று தொகுதி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வந்தனர். கிருஷ்ணகிரி உள்ளிட்ட மூன்று தொகுதி நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற இருந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. அவர்களை, ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMESH
ஜூன் 30, 2025 11:28

தோல்வி உறுதி... மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.... உங்கள் கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம்.. திருமங்கலம் பார்முலா ஈடுபடாது..


arunachalam
ஜூன் 19, 2025 11:00

தலைப்பை "ஒரு குடும்பத்திற்கு தமிழகம்" என்று மாற்றுவது சிறப்பாக இருக்கும்


V RAMASWAMY
ஜூன் 19, 2025 09:35

சரியாக சொல்கிறார் முதல்வர், மக்கள் அரக்கத்தனத்தை ஒழிக்க ஓரணியில் திரண்டுவிட்டனர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 07:50

தேர்தல் ஜுரம் ...... பிதற்றல் அதிகமாகிவிட்டதன் அறிகுறி .....


sridhar
ஜூன் 19, 2025 07:25

ஓரணியில் தமிழகம், அது உங்களுக்கு எதிரணியில்..


ramani
ஜூன் 19, 2025 07:21

மக்கள் ஓரணியில் திரண்டு திராவிஷ மாடல் அரசுக்கு ஆப்பு வைக்க முடிவெடுத்து விட்டனர்


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2025 07:15

தேர்தலில் தோல்வி அடையப் போவதை உறுதியா உணர்ந்து விட்டார். தவிர்க்க தன்னால் முடிந்ததை செய்து பார்க்கிறார். திமுகவின் ஓட்டுகள் உயர வாய்ப்பு இல்லை.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 07:02

ஓரணியில் திரள்வோம்... ரு குவாட்டரும் ..கோழி பிரியாணியும் கண்டிப்பாக உண்டு ... மறந்திடாதே உடன்பிறப்பே மறந்தும் இருந்துவிடாதே ... காத்திருக்கும் குவாட்டர் பாட்டில்களை காலிசெய் ..கோழிப்பிரியாணிக்கு சர்வ நாசத்தை விளைவி ... சிப்பாய்கள் போல் அணிவகுத்து போர் பரணி பாடி வா ...பார் சிறுத்ததோ படை பெறுத்ததோ என்கிற அளவிற்கு ..வெற்றி முழக்கமிட்டு வா ... இப்போதே எனக்கு வெற்றி முரசுகொட்டும் சத்தம் கேட்கிறது .ஹம்மர் காரில் வரும் என்னை பார்க்க ..உன்னிடம் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து இருக்கும் பழைய சைக்கிளில் வா ..அதுவும் இல்லாவிட்டால் நடந்து வா .. இப்படை தோற்கின் எப்படி வெல்லும் ..பறந்து வா , பாய்ந்து வா , சீறி வா ..சினந்து வா ..வந்து ..மறக்காமல் தேர்தல் நிதியை அள்ளி குவித்திடு..இன்பநிதி மகிழ்த்திடுவார் ,, மகிழ்ந்து சிரித்திடுவார் ..


R.MURALIKRISHNAN
ஜூன் 19, 2025 06:48

ஆம், விடியா ஆட்சியை அகற்ற, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, தமிழர்களை பாதுகாக்க, கஞ்சா, டாஸ்மாக் போன்றவற்றிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற, கனிமவள கொள்ளை மற்றும் கொலை, கொள்ளை திருட்டு திராவிட மாடலிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஓரணியில் மக்கள் திரண்டு சர்வாதிகாரியை விரட்டும், வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்கும் நாள் இன்று. வாழ்க பாரதம், வளர்க தமிழகம்


Svs Yaadum oore
ஜூன் 19, 2025 06:34

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை..மூதாட்டியிடம், மதுபோதையில் அத்துமீறிய இளைஞர்கள்...வாயில் மண்ணை திணித்து கூட்டு பாலியல் வன்கொடுமை... உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை.....இவ்வளவு கேவலமான நிலைமையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு ...இதை சரி செய்ய துப்பில்லை ....ஆனால் ஓரணியில் தமிழகம் உடன்பிறப்பே வா என்ற பெயரில், கட்சி நிர்வாகிகளை அழைத்து, பேசி வருகிறாராம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை