உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்

1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்

கடந்த அக்., 15க்குள் ஓட்டு திருட்டு தடுப்பு கையெழுத்து இயக்கத்தை முடிக்க திட்டமிட்டு, மண்டலம் வாரியாக ஐவர் குழுவை தமிழக காங்கிரஸ் நியமித்தது. பின், அக்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கட்சி அமைப்பு ரீதியாக உள்ள, 77 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை, சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுதும், 1 கோடியே, 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக, சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் முன்னிலையில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Suppan
நவ 05, 2025 17:33

பேப்பர் வேஸ்ட். குப்பைத்தொட்டிக்குத்தான் இல்லை சுண்டல், பகோடா விற்பவர்களுக்குத்தான் போகப்போகின்றன


என்றும் இந்தியன்
நவ 05, 2025 17:17

ஓட்டு திருட்டை தடுப்பதற்கான முயற்சிதான் SIR, அதற்கு முட்டுக்கட்டை போடும், கான்கிராஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி மு கவினர்???ஏன்???இப்படியெல்லாம் உண்மை வழியில் சென்றால் அவர்கள் ராஜாங்கம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நெடுங்காலம் படுத்துவிடுமல்லவா அதற்குத்தான் அவர்கள் வாழ்விழந்து நடுரோட்டில் நிற்கும் அபாயம் வருமென்று சரிதானே????


duruvasar
நவ 05, 2025 16:14

இதுக்கெல்லாம் பேக்கஜ் இருக்குங்க ஐயா. . இன்னும் 50 லட்சம் கேட்டாக்கூட வாங்கிக்கிடலாம் . அது போக உங்க தலைவர் கேட்டதுபோல இதில் எந்தனை சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்களுடையது.


shyamnats
நவ 05, 2025 09:10

ஓட்டு திருட்டை தடுப்பதற்கான முயற்சிதான் SIR, அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு பதில் முட்டுக்கட்டை போடும், கான்கிராஸ், கம்யூனிஸ்ட் மற்றும் தி மு கவினர் செயல்பாடுகள் மக்களிடம் எடுபடாது. மக்கள் இவர்களை சந்தேக படுவார்கள்


V RAMASWAMY
நவ 05, 2025 08:41

200000 நபர்கள் ஐந்து விதமாக கையெழுத்து போட்டாலே ஒரு கோடி ஆகிவிடுமே. இதில் ஒரு பெருமிதமா? இனி கையெழுத்து போட்டால் மட்டும் செல்லாது என்று ஒரு விதி வேண்டும், கையெழுத்துடன் ஆதார் எண்ணும், வாக்காளர் அட்டை எண்ணும் இருக்கவேண்டும்.


Ramesh Sargam
நவ 05, 2025 08:03

அடுத்து கைநாட்டு பதிவு இயக்கம். அதில் 2 கோடி கைநாட்டு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.