உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு; நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு

குழாய் வழியே கிருஷ்ணா நீர் பெறும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு; நிதி ஆதாரம் சரியில்லாததால் முடிவு

சென்னை:ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும், 15,000 கோடி ரூபாய் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. மாநில நிதி நிலைமை சரியில்லை என நிதித்துறை கைவிரித்ததால், தமிழக நீர்வளத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை 1 டி.எம்.சி.,யாக உள்ளது. விரிவாக்க பகுதிகளின் பரப்பளவு அதிகரித்து வருவதால், குடிநீர் தேவை 2030ம் ஆண்டிற்குள், 1.50 டி.எம்.சி.,யாக அதிகரிக்கும் என, சென்னை குடிநீர் வாரியம் கணக்கிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w635xkmd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்காக, புதிய நீராதாரங்களை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் - தத்தமஞ்சி நீர்த்தேக்கம், செங்கல்பட்டு மாவட்டம், கொளவாய் ஏரி கொள்ளளவு உயர்த்தும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை, சோழவரம் ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இந்த ஏரிகளுக்கு வடகிழக்கு பருவமழை வாயிலாக நீராதாரம் கிடைத்து வருகிறது. பூண்டி ஏரிக்கு ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்தும் நீர்வரத்து கிடைக்கிறது. இதற்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் படி, ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறக்கவேண்டும்.இதில் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.,யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.,யும் வழங்கப்பட வேண்டும். இந்த நீரை கொண்டு வர ஆந்திராவில், 152 கி.மீ., துாரத்திற்கும், தமிழகத்தில், 25 கி.மீ., துாரத்திற்கும் கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கால்வாயின் இரண்டு புறங்களிலும் விவசாயம் நடந்து வருகிறது. ஆந்திர விவசாயிகள் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.இதற்காக, கால்வாயில் இருந்து மோட்டார் போட்டு நீரை எடுத்து கொள்கின்றனர். இதற்கு, அம்மாநில நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.ஆனால், தமிழகத்தில், நீர் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியில்லை. ஆந்திர விவசாயிகள் அதிகளவில் நீரை எடுப்பதால், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில்லை. மேலும், கோடை காலங்களில் நீர் அதிகம் ஆவியாகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கண்டலேறு அணையில் இருந்து புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு ராட்சத குழாய் வாயிலாக தண்ணீரை நேரடியாக கொண்டுவர நீர்வளத்துறையால் திட்டமிடப்பட்டது.இதற்கு, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் மாநில அரசிடம் இதற்கான நிதி கோரப்பட்டது.ஆனால், இதுவரை நிதித்துறை நிதி வழங்கவில்லை. இதனால், திட்டத்தை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த திட்டத்தை செயல்படுத்தினால், 12 டி.எம்.சி., நீரில் ஒரு சொட்டு கூட வீணாகாமல் கொண்டு வர முடியும். ஆனால், மாநில அரசின் நிதி நிலைமை சரியில்லை எனக்கூறி, இந்த திட்டத்திற்கு நிதி வழங்க நிதித்துறை மறுத்துவிட்டது.உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடம் கடனுதவி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கேட்கப்பட்டது. இதனால், மாநில அரசின் கடன் சுமை அதிகரிக்கும் என, நிதித்துறை கைவிரித்துவிட்டது. பிற்காலங்களில் நிலைமை சரியானால், நிதி வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.எனவே, குழாய் வழியாக கிருஷ்ணா நீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

anbu raja
ஜூன் 18, 2025 19:07

இந்த தி. மு. க ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான். காவிரி குண்டாறு திட்டத்தை நிறுத்தினார்கள். இந்த திட்டத்தையும் நிறுத்துகிறார்கள். இந்த தமிழ்நாட்டை சுடுகாடா மாற்ற போகிறார்கள்.


Bhaskaran
ஜூன் 17, 2025 10:53

ஏங்க நீங்க வேற சென்னையில் தண்ணீர் லாரி மாபியாக்கள் ஆளும்தரப்பு மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு செயல்படுவதாக தகவல் இவர்கள் இதுவும் செய்வார்கள் இதுக்கு மேலும் செய்வார்கள்


Nathan
ஜூன் 16, 2025 18:33

நீங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அடித்த கொள்ளையில் சிறிய பங்கு கூட செலவு பிடிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏன் இப்படி தயங்குகிறீர்கள்


Rajagopal
ஜூன் 17, 2025 12:26

இந்த திராவிட மாடல் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருக்கிறது. அந்த பணம் எங்கே போச்சு.


suresh guptha
ஜூன் 16, 2025 17:58

when we have tasmac water why we need this, this has to be paid to AP GOVT,IF IT IS TENDER THEN THERE IS FUNDS


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 14:42

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இதுவரை திமுக எந்த ஒரு நீர் திட்டத்தையும் சரியாக நிறைவேற்றியதில்லை. பாதியில் கைவிடப்படும் அல்லது அதிமுக திட்டத்தை முடித்திருக்கும் அல்லது முடிந்த திட்டம் அரைகுறையாக இருக்கும். அரைவேக்காடு தனமாக தான் திமுகவின் நீர் திட்டங்கள். தூர் வாருகிறேன் என்ற பெயரில் மணல் கொள்ளை கனிம வள கொள்ளை படுஜோராக நடக்கும். சில பல வருடங்களுக்கு முன்பு மணல் திருட்டில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் ஒன்று தானாக அமைதி ஆகி விட்டது.


Rengaraj
ஜூன் 16, 2025 13:29

தமிழகத்தில் அந்த கால்வாய் 25 கிலோமீட்டர் உள்ளதாக செய்தி சொல்கிறது. தமிழகத்தில் ஓடும் கால்வாயின் மேல் சோலார் தகடுகள் பதித்து சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கலாமே ? . அந்த மின்சாரத்தை தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கோ அல்லது ஆந்திராவுக்கோ விற்கலாமே ? இதற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசிடம் கேட்கலாமே ? கொஞ்சமாவது நிதி கிடைக்காதா ? ஏதுஏதுக்கோ கடன் வாங்கிறோம், இதற்கு வாங்ககூடாதா ? ஆந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை தொடர்ந்து வரவைக்கலாமே


Gopalakrishnan
ஜூன் 16, 2025 13:22

புதிய வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஜெயலலிதா பெரிய தீர்க்கதரசி. இன்று போற்றப்படுகிறார்.


Ramesh Sargam
ஜூன் 16, 2025 12:43

கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலை வைக்க நிதி இருக்கிறது. கார் பந்தயம் நடத்த நிதி இருக்கிறது. ஆங்காங்கே கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்த தமிழக அரசின் நிதி மறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மக்களின் மிக மிக அத்தியாவசியமான தண்ணீரை குழாய் வழியே கொண்டுவர நிதிநிலை சரியில்லை.


rama adhavan
ஜூன் 16, 2025 12:03

அப்படி செய்தால் மாநிலம் முழுதும் பெண்கள் ஓட்டு வங்கி வறண்டு விடுமே? எப்படியும் இந்த உரிமை தொகையை சில காலத்திற்கு பின் வழங்க அரசிடம் நிதி இருக்காது.


புரொடஸ்டர்
ஜூன் 16, 2025 11:18

உலக வங்கி கடன் வாங்கி மக்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற திமுக தவறியது ஏன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை