உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: நிதி ஒதுக்கியது தமிழக அரசு

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: நிதி ஒதுக்கியது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு கருணைத்தொகை, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023-2024ம் ஆண்டிற்கான கருணைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 லட்சம் நிதி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.இதன்படி'சி' மற்றும் ' டி' பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகை தொகுப்பூதியம், சிறப்பு கால முறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ.1,000 கருணைத்தொகை'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 21:44

புத்தாண்டு பிறந்து விட்டது. இந்த வருஷத்திலாவது எதிர்மறை சிந்தனை, பேச்சுக்களைத் தவிருங்களேன். தனது ஊழியர்களுக்கு அரசு தன்னால் இயன்றதை தருகிறது. பாராட்டுங்கள் அல்லது கடந்து செல்லுங்கள். நீங்கள் அரசு ஊழியரா?? இந்த போனஸ் தொகை அறிவிப்பு பிடிக்கவில்லை யா? போனஸ் தொகையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விடுங்கள். அது இயலாதா? உங்கள் அக்கௌன்ட் ல் போனஸ் கிரெடிட் ஆனதும், ஏதாவது முதியோர் இல்ல அக்கௌன்ட் டுக்கு மாற்றிவிடுங்கள். போனஸ் வழங்கும் அரசை எதிர்த்து எழுதுவது வெறுப்பு அரசியல். செய்யாதீர்கள்.


அநாமேயதன்
ஜன 02, 2025 18:35

ஒரு பியூன் சாதாரணமாக ஒருவரிடம் வாங்கும் டிப்ஸ் ஐநூறு


Kundalakesi
ஜன 02, 2025 17:40

500 ரொம்ப பெரியத்தொகை. ஓய்வூதியம் பெறுவோர் சந்திக்கும் செலவுகள் இந்த அரசிற்கு தெரியுமா


Venkateswaran Rajaram
ஜன 02, 2025 18:21

500 ரொம்ப பெரியத்தொகை. ஓய்வூதியம் பெறுவோர் சந்திக்கும் செலவுகள் இந்த அரசிற்கு தெரியுமா...100/100 உண்மை லஞ்சம் வாங்காதவர்களுக்கு இது சிறிய தொகை ...லஞ்சத்தில் ஊறி ஓய்வானவர்களுக்கு இது ஒரு தொகையே அல்ல


Venkateswaran Rajaram
ஜன 02, 2025 17:22

லஞ்சம் வாங்கியவர்களுக்கு ஊழல்வாதிகள் ஊழல் அரசியல்வாதிகள் கொடுக்கும் ஓட்டுக்கான லஞ்சம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை