உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 50,000 விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்

50,000 விவசாய மின் இணைப்புகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டில், 50,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்குகிறது. அரசும், மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், விவசாய மின் இணைப்பு உடனே வழங்கப்படுவதில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விவசாய மின் இணைப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களில், 'சீனியாரிட்டி' அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. எனவே, நடப்பு, 2024 - 25ல், 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என, ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. நான்கரை மாதங்களாகியும் விவசாய மின் இணைப்பு வழங்கும் பணி துவங்கப்படாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தற்போது, 50,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க, மின் வாரியத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மொத்தம், 23.60 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக, 7,000 கோடி ரூபாய் செலவாகிறது. சென்னை, செப். 16-தமிழகத்தில் இந்தாண்டில், 50,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க, மின் வாரியத்திற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்குகிறது. அரசும், மின் வாரியமும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், விவசாய மின் இணைப்பு உடனே வழங்கப்படுவதில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விவசாய மின் இணைப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பவர்களில், 'சீனியாரிட்டி' அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுவரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. எனவே, நடப்பு, 2024 - 25ல், 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என, ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. நான்கரை மாதங்களாகியும் விவசாய மின் இணைப்பு வழங்கும் பணி துவங்கப்படாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தற்போது, 50,000 விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க, மின் வாரியத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மொத்தம், 23.60 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக, 7,000 கோடி ரூபாய் செலவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ethiraj
செப் 16, 2025 05:34

For next 100 years we will give electric connection to farmers. Anounce 50 ps per unit for all agricultural connection no one will apply for new connection.


Kumaravel Balaji Balaji
செப் 17, 2025 20:07

2020 இந்த வருடத்தில் நாங்க பதிவு பண்ணுச்சு எங்களுக்கு எப்ப கிடைக்கும் இலவச மின்சாரம்


Mani . V
செப் 16, 2025 05:28

எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு. நாலரை வருடமாக கொள்ளையடித்ததைத் தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை. இப்பொழுது செய்தால் தேர்தலில் அறுவடை செய்யலாம் என்ற மொள்ளமாரித்தனம்.