உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

சென்னை: கும்பகோணம் பல்கலை தொடர்பான மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, கடந்த ஏப்., மாதம் சட்டசபையில் மசோதா ஒன்றையும் தமிழக அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவில் பல்கலை வேந்தராக முதல்வரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தார். வேந்தரின் அனுமதியில்லாமல் கவுரவ பட்டங்களை வழங்க முடியாது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கவர்னரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கவர்னர் ரவி மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், கவர்னரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Balasubramanian
அக் 04, 2025 20:24

Tomorrow they will pass resolution Tamilnadu our own property Governor pls sign This is DMK


venkat
அக் 04, 2025 20:12

மாணவர்களுக்கு கொள்ளைக்காரர்கள் வேந்தர்களா... கூடவே கூடாது... அனைத்திலும் ஊழல் ,கொள்ளை


Sundar R
அக் 04, 2025 19:43

கவர்னர் அவர்கள் எந்த லெட்டரில் கையெழுத்து போட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பினார்?


Rameshmoorthy
அக் 04, 2025 18:47

Governor is following his protocol and why the government is panicking


sankaranarayanan
அக் 04, 2025 18:32

நடக்கக்கூடாது.நடைமுறைக்கு ஒத்துவாராத ,தான் நினைத்ததை எல்லாமே மசோதாவாக கொண்டுவந்தால் அதற்கு யாரைய்யா சம்மதம் கொடுப்பார்கள் இந்த நிர்பந்த முறையையே கைவிடுங்கள் ஆளுனருடன் சமரசமாக பழகுங்கள் இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத்தான்.


முக்கிய வீடியோ