உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கு ஆண்டில் ரூ.9,011.45 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றம்: தமிழக அரசு பெருமிதம்

நான்கு ஆண்டில் ரூ.9,011.45 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றம்: தமிழக அரசு பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில், 1.21 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 9,011.45 கோடி ரூபாயில், 71 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் அறிக்கை:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் விரைந்து நகர் மயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் வளர்ச்சி பெறுகின்றன.நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 6,655.80 கோடி ரூபாயில், 446 பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், 11 மாநகராட்சிகள், 10,639.80 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ், 28 புதிய பஸ் நிலைய பணிகள், 968.08 கோடி ரூபாயில் அனுமதிக்கப்பட்டன.திருச்சி, நாமக்கல், சங்கரன்கோவில், குளச்சல், தேனி மாவட்டம் கூடலுார் பஸ் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மற்ற பஸ் நிலைய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 14 மாநகராட்சிகளில், 3,360.64 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், 4,673.60 கோடி ரூபாய் செலவில், 9,358.10 கி.மீ., நீள சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நான்கு பேரூராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகளில் 10,565 ஊரக குடியிருப்புகளுக்கான, 71 குடிநீர் திட்டங்கள், 9,011.45 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால், 1.21 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சிகளில், 1,652 பேர் கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், 107.74 கோடி ரூபாயில், குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திருட்டு திராவிடன்
ஜூன் 09, 2025 10:55

ஐயோ ஐயோ ஐயோ. இதுவரையில் எவ்வளவோ பெருமிதம் அடைந்துள்ளார்கள் இந்த தமிழக அரசு அரசியல் வியாதிகள்.


Padmasridharan
ஜூன் 09, 2025 09:28

இன்னும் மக்கள் 40/50௹ கொடுத்து தண்ணி பாட்டில் வாங்கி கொண்டுதான் இருக்காங்க. குழாயில தண்ணி அழுக்கா வருது. சில இடத்துல மேடுன்னு சொல்லி தண்ணி வரல. ஆனா வரி மட்டும் வாங்குறாங்க. அதுவும் அதிகமா செலுத்தணும், குறைக்கணும்னா பாதி அவங்களுக்கு இலஞ்சமா கையில இப்பெல்லாம் ஃபோன் மூலமா வாங்கி receiptல கம்மியா போட்டு வாங்கறாங்க.


அப்பாவி
ஜூன் 09, 2025 07:27

அங்கங்கே தண்ணி குழாய் பிச்சிக்கிட்டு ஊத்துது.


raman
ஜூன் 09, 2025 07:19

இது மத்திய அரசின் ஜல ஜீவன் திட்டம். தி மு க ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது


G Mahalingam
ஜூன் 09, 2025 07:08

ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசு திட்டம். எப்படிடா நேரடியாக பொய் சொல்கிறீர்கள். இதில் 30 சதவீதம் கோப லபுரத்திற்கு போய் இருக்கும்.


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 06:10

ஒன்பதாயிரத்தி தொண்ணூற்றி தொள்ளாயிரம் ... ஸ்டிக்கர்...


Natarajan Ramanathan
ஜூன் 09, 2025 05:52

அனைத்தும் மத்திய அரசு திட்டம்தான். மாநில அரசு இதிலும் ஊழல் தவிர ஒரு மயி..ரும் புடுங்கவில்லை.


Shankar
ஜூன் 09, 2025 04:49

அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள், தலைப்பை பார்த்து நான் கூட வியந்து போனேன் ஏதோ விடியாத ஆட்சியின் சாதனை என்று. இந்த மத்திய அரசின் திட்டத்தில் எத்தனை ஆயிரம் கொள்ளையடித்ததோ இந்த விடியாத அரசு.


Mani . V
ஜூன் 09, 2025 04:40

கொள்ளையடித்த பல ஆயிரம் கோடியை எப்படிடா திட்டப் பணி நிறைவேற்றத்தில் சேர்க்க முடியும்? எது கொள்ளையடிப்பதும் உங்கள் திட்டத்தில் சேர்த்தியா?


சமீபத்திய செய்தி