உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதி வாபஸ்: கடும் எதிர்ப்பால் தமிழக அரசு பல்டி

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதி வாபஸ்: கடும் எதிர்ப்பால் தமிழக அரசு பல்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும், அனுமதியை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனுார், கே.வேலங்குப்பம், காவனுார், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில், ஹைட்ரோகார்பன் ஆய்வை நடத்த, மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கி உள்ளது.

கண்டனம்

இத்தகவல் வெளியானதும், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசை கண்டித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலர் அர்ஜுனன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, 2020ம் ஆண்டு, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் அடிப் படையில், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் போன்றவற்றில், புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன், ேஷல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வு தொழில்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்தது.

அறிவுறுத்தல்

இதற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேரடியாக, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய செய்தி, தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான, எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதல்வர் ஸ்டாலினின் திடமான கொள்கை. எனவே, தற்போது, மட்டுமின்றி, எதிர்காலத்திலும், மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும், இந்த திட்டங்களை செயல் படுத்த, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kulandai kannan
ஆக 25, 2025 14:35

ஒரு தலைவன் என்றால் மக்களை வழிநடத்த வேண்டும். மக்களே வழி நடத்துவார்கள் என்றால் தலைவர் எதற்கு? துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்று உண்மையான தலைவர் யாரும் இல்லை.


Sundar R
ஆக 25, 2025 11:36

ENVIRONMENTAL CLEARANCE WAS ALREADY GIVEN BY TN STATE GOVERNMENT AUTHORITY SEIAATO DIG 20 WELLS WITH A DEPTH OF 2 OR 3 KMS TO EXTRACT HYDROCARBON. Now, suddenly the Tamil Nadu State Government is opposing like 2017 Neduvasal due to some pressure that was exerted from somewhere from some corners. Who are the people opposing the Hydrocarbons? As usual, only Anti-national, Separatist, Christian Missionaries and Christian Missionary Political Parties like the DMK, TVK, NTK, VCK, MDMK and MNM are opposing. No Political Party belonging to Hindus or Muslims are opposing. In fact, they were not at all concerned. So, the voice of the Christian Missionaries has bad and malafide intentions to harm our nation and therefore it has to be ignored. But, Anbumani and Nellai Mubarak who are responsible citizens of our country are induced and forced to oppose by the radical elements of Tamil Nadu. Anbumani and Nellai Mubarak should view through the prizm of advantages for Tamil Nadu in respect of economy and labour and rewrite their opinions by keeping the DMK in backyard. The drilling of 20 wells for Hydrocarbons has to be continued. Because, it will provide new jobs for several thousands of people.


GMM
ஆக 25, 2025 08:42

இயற்கை எரி வாய்வு சுமார் 10000 அடிக்கு கீழ். வேளாண் பயிரின் வேர் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 அடி. திராவிட ஊழல் அமைச்சர் பதில். இனி தொழில் நுட்பம் கொண்டு சைடு போர் போட்டு, ஆந்திரா, இலங்கை இயற்கை வளங்களை எடுக்க முடியும். ? மத்திய அரசு டாஸ்மாக், பெட்ரோல்..விலையை ஏன் ஜி.எஸ். டி. கீழ் கொண்டுவர முடியவில்லை. தமிழக எரி பொருள் விற்பனை மானியம் சலுகை இல்லாமல் மத்திய அரசு விற்பனை செய்ய வேண்டும்.


Varadarajan Nagarajan
ஆக 25, 2025 07:43

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கின்றோம் என்று ஒருபுரமும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான எண்ணெய் எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதிய திட்டங்களுக்கு அனுமதி மறுத்தும் மேலும் ஸ்டெர்லைட் போன்ற செயல்பட்டுக்கொண்டிருந்த தொழிற்சாலைகளை மூடியே தீருவோம் என மறுபுறமும்?


Svs Yaadum oore
ஆக 25, 2025 07:09

மனித வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளை ....அந்த மணல் பெங்களூருக்கு ஏற்றுமதி ....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ....தர்மபுரி கல்லை உடைத்து ஜல்லி ஏற்றுமதி ....கேரளாக்காரன் மருத்துவ கழிவை இங்கு கொண்டு வந்து கொட்ட அவனிடம் லஞ்சம் வாங்கி அனுமதி ...இது போன்ற விவசாய நல திட்டங்களுக்கு மட்டும்தான் விடியல் இங்கே அனுமதி கொடுக்கும் ...வேறு எந்த திட்டமும் இங்கே அனுமதி கிடையாது ..


Svs Yaadum oore
ஆக 25, 2025 07:08

கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவனிடம் அனுமதி கேட்டால் போதை கம்பெனி மெத்து கம்பெனி கஞ்சா கம்பெனி நடத்தத்தான் அனுமதி கொடுப்பான் ..கள்ள சாராயம் தவிர்த்து வேற எதுக்கும் இங்கே அனுமதி கிடையாது ....இவனுங்கதான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டுவந்தானுங்களாம் .....


Svs Yaadum oore
ஆக 25, 2025 07:07

மனித வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளை.. அந்த மணல் பெங்களூருக்கு ஏற்றுமதி ....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ....தர்மபுரி கல்லை உடைத்து ஜல்லி ஏற்றுமதி ....கேரளாக்காரன் மருத்துவ கழிவை இங்கு கொண்டு வந்து கொட்ட அவனிடம் லஞ்சம் வாங்கி அனுமதி ...இது போன்ற விவசாய நல திட்டங்களுக்கு மட்டும்தான் விடியல் இங்கே அனுமதி கொடுக்கும் ...வேறு எந்த திட்டமும் இங்கே அனுமதி கிடையாது ..


Nathan
ஆக 25, 2025 05:42

அமெரிக்க அதிபர் இவ்வளவு காரி துப்புறாரே இந்த ஐ போன் தொழிற்சாலை இங்கு வேண்டாம் என்று தடை விதிக்க வேண்டியது தானே முதல்வரே. உங்களுக்கு எல்லாம் மானம் ரோஷம் எல்லாம் இல்லையா


Palanisamy Sekar
ஆக 25, 2025 05:30

நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆய்வுகளை இப்படியே அரசியலுக்காக தடுத்துக்கொண்டிருந்தால் நாட்டின் முன்னேற்றம் தடைபடாதா என்ன? மாநில அரசாங்கம் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. இதே அரசியல்வாதிகளும் அப்படியே. ஆனால் விவசாய போன்றவையே போர்த்திக்கொண்டு இவர்கள் செய்கின்ற ஒவ்வோர் செயலும் ஓட்டுவங்கி அரசியலே காரணம். தஞ்சாவூரில் நிலத்தடி நீர் மாசுபட்டு சாராய வாடையே வீசினாலும் எதிர்க்க ஆளில்லை. சாராய ஆலைகளை எதிர்த்து இந்த நடுத்தர தலைவர்கள் மௌனமாக இருபப்து ஏனோ? நாட்டின் ஒவ்வோர் வளர்ச்சிக்கும் இதுபோன்ற பதவி பிரியர்கள் ஒன்றுசேர்ந்து தடைபோட வந்துவிடுவார்கள். இவர்களை ஒழித்தாலே போதும் நாடு முன்னேற்றம் கண்டுவிடும் விரைவாக


Mani . V
ஆக 25, 2025 05:24

மக்களின் எதிர்ப்புக்காக என்று சொல்வதெல்லாம் பொய்யோ பொய். தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக போடும் நாடகம்.


சமீபத்திய செய்தி