வாசகர்கள் கருத்துகள் ( 43 )
கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை ,
இதற்கு தான் சொல்கிறேன் ஒற்றை தமிழகம் என்ற குடிகார மாநிலம் தேவையில்லை.... மூன்று மாநிலங்களாக பிரித்து சிதறடித்தால் திராவிடம் நாஸ்திகம் அண்ணா துரை கருணாநிதி கும்பல் காணாமல் போய்விடும் என்று....யார் கேட்கிறார்கள்?
சிதறடிக்க தமிழர்கள் ஒன்றும் உண்போல மூடர்கள் அல்ல தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு உன்போல சிண்டு முடியும் கொ..டைய உடைக்கும் திறனுமுண்டு??
எல்லை தூண் அதை தீப தூண் என்றால் ஒரு பாமரன் விளக்கு ஏற்றமும் என்றால் ஏணி வெச்ச ஏரியா விளக்கு ஏற்றுமாறு நம் முன்னோர்கள் வடிவமைத்து இருப்பார்கள் , நம் இடுப்பளவுக்கு இருந்தால் தானே குனிந்து விளக்கு ஏற்றமுடியும் இதுவே அது தீப தூண் இல்லை என்று சொல்ல , அது எல்லை தூண் அதனால் தான் உயரமாக , வெகு தூரம் இருந்தாலும் தெரியும் வண்ணம் வடிவமைக்க பட்டு உள்ளது , முருகர் தான் இவர்களின் அறிவு கண்ணை திறக்க வேண்டும்
எல்லைத்தூணுக்கு பீடம் வேறெங்காவது கட்டியுள்ளார்களா?. அதன் உச்சியில் குழி அமைத்து விளக்கேற்ற வசதி செய்திருக்கிறார்களா? வேறெங்கும் (சிக்கந்தர் என்ற)ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் சமாதி உண்டா? வெறும் 200க்கு உங்க முட்டு ரொம்ப ஜாஸ்தி.
தம்பி ரொம்ப அறிவா பேசுதே - யாராவது ஒரு பெரியார், அண்ணா, கலைஞர் அவ்வார்டு ஏதாவது ஓரமா கிடந்தா எடுத்து கொடுங்கப்பா
எங்கள் ஊர் பெருமா கோவில் தீபதூன் இதை விட உயரமானது. எழுவது வயசு பூசாரி தான் இரும்பு ஏணியில் ஏறி விளக்கு போடுவார். எதற்கோ எதற்கும் எதற்குமோ வித்தியாசம் தெரியாது என்று ஒரு சொல்லாடல் உண்டு. அது உன் தயிர்வடை கூட்டத்துக்கு தான் சால பொருந்தும்.
காஞ்சியில் சங்கர மடத்துக்கு மிக அருகில் பள்ளிவாசல் உள்ளது. ஐந்து வேளையும் ஒலிபெருக்கியில் ஆசான் ஒலிக்கிறது. மடத்திலிருந்து ஆட்சேபிக்கவில்லை. தீபம் ஏற்றினால் அல்லாஹ் தடுக்க மாட்டார். எல்லாவற்றிலும் அரசியலா?.
உண்மையான ஹிந்துக்களுக்கு தெரியும் தீபம் ஓவ்வொருவருடமும் தவறாமல் முறையாக தீபம் ஏற்றப்படுகிறதென்று இடையில் சில ஓநாய்கள் ரத்தம் குடிக்க வழக்கத்திற்குமாறான தீபத்தூண் என்கிற புதிய பதமே தவறான வழக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது ஜோதி என்பதுதான் மலையில் ஏற்றப்படும் விளக்கு வீட்டிலும் தெருவிலும் ஏற்றப்படும் எளிய விளக்குதான் தீபம் எனப்படும் அதனால் கலவர க.போதிகளின் கொட்டத்தை அடக்கவேண்டும். உண்மை இஸ்லாமியர்களுக்கு இதில் ஏதும் பெரிய பிரச்சினை இல்லை சட்டம் ஒழுங்கை கெடுக்க யார் முயன்றாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிகை எடுக்கவேண்டும்.
பெரிய சிகரத்தில் தர்கா உள்ளது. மற்றொரு சிகரத்தில் தூண் உள்ளது. இடையில் 200 மீட்டருக்கு மேலிருக்கும். தூண் உள்ள இடம் ஆலயத்தின் நிலம் என அரசே ஒப்புக் கொள்கிறது .ஆலய இடத்தில் விளக்கேற்ற என்ன பிரச்சினை? தமிழகத்தில் பல இடங்களில் ஒரே சாலையில் ஆலயமும் தர்காக்களும் உள்ளன. இரு மத திருவிழாக்களும் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை. விஜய்யும் ஸ்டாலினும் இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக எதுவும் செய்வார்கள்.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். விளக்கம்: தனக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பதற்காக நீதி தவறி சம்பாதிக்கும் செல்வத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். கருத்து: சுயலாபத்தைவிட நீதி முக்கியம்.
ஜோசப் விஜய் அவர்களே தவறு செய்யாதீர்கள் பெரும்பான்மை மக்கள் பொறுமைசாலிகள் அவர்கள் பொறுமையின் எல்லையில் உங்களுக்கு வாக்களித்தார்கள் அதை நினைவில் வைத்தால் நன்று.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எதிர்பார்த்தது போலவே இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது த வெ க அரசு. இந்துக்கள் ஓட்டு போடுவார்களா என்பதை பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படப்போவதில்லை. ஏனென்றால் இங்கே இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டாலே அவர்கள் ம..த...வெ...றி பிடித்தவர்கள் என்று மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த விஷயத்தில் நியாயமாக கூட யாரும் பேச மாட்டார்கள். அப்படியே பேசினாலும் சங்கி, பா...சி.... ச பாஜக, கலவரம் செய்ய முயற்சி என்று சொன்னால் போதும் தெறித்து ஓடி விடுவார்கள். எனவே தான் தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் இஸ்லாமிய ஓட்டுக்காக இவ்வளவு அப்பட்டமாக குட்டிக்கரணம் அடிக்கிறது. சிறுபான்மை வாக்குகள் + தலித் வாக்குகள் + பெண்கள் வாக்குகள் = வெற்றி. பொதுவாகவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பார்முலாவே இதுதான். திமுக இப்படித்தான் வெற்றிபெற்றது. பாஜகவை காட்டி ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்குகளையும் தன் பக்கம் கொண்டு வந்தது. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்ததால், அதிமுகவின் தலைமை சாத்திய அடையாளத்துக்குள் சிக்கியதால் தலித் வாக்குகளும் திமுகவிடம் சென்றன. பெண்களுக்கான சிறப்பு இலவச திட்டங்கள். இவையெல்லாம் சேர்த்துதான் 2019, 2021, 2024 என 3 தேர்தல்களை தட்டி தூக்கியது திமுக. விஜய் அரசியலுக்கு வந்த உடனே அவரும் இதே பார்முலாவைத்தான் கையில் எடுத்தார். விஜயே ஒரு சிறுபான்மையினர் என்பதால் சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் சுலபமாக அங்கு சென்றன. தலித் + பெண்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றார் விஜய். முக்கியமாக அடுத்த தலைமுறை வாக்காளர்களின் ஒரே சாய்ஸாக விஜய் தான் இருந்தார் என்பதால் 1.70 கோடி வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விட்டார் விஜய். ஜெயித்த பிறகு திமுக கூட்டணியில் இருந்தவர்களை பிய்த்து எடுத்து, திமுகவிடம் மிச்சம் மீதி இருக்கும் சிறுபான்மை வாக்குகளையும் தன் பக்கம் கொண்டு வந்து விடலாம் என்று தீவிரமாக முயற்சி செய்தார். அதற்காக சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் அள்ளி வீசப்பட்டது. ஆனாலும் இடைத்தேர்தலில் அவர்கள் குழப்பமாக வாக்களித்து விஜய்க்கு செக் வைத்தனர். முக்கியமாக இஸ்லாமிய வாக்குக்கள் இன்னும் கணிசமாக திமுக வசம் இருக்கிறது. இது ஒருவகையில் திமுகவுக்கு இன்ப அதிர்ச்சி, விஜய்க்கு ஷாக். ஒருவேளை இடைத்தேர்தலில் பெரும்பாலான இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்குகள் விஜய் பக்கம் சென்றிருந்தால், இந்நேரம் பாஜக பக்கம் ஒதுங்கியிருக்கும் திமுக. ஆனால் அதை தடுக்கும் விதமாக திமுகவுக்கும் ஓட்டு போட்டிருக்கின்றனர் சிறுபான்மையினர்கள். அவர்களின் அரசியல் புரிதல் அப்படி இருக்கிறது. அதில் 10% இந்துக்களுக்கு இருந்தால் கூட போதும். இப்போது திமுகவுக்கும் ஒரு நப்பாசை. சிறுபான்மை மக்கள் பாதி பேர் நம்மிடம் தான் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தீவிரமாக முயற்சித்தால் விஜய் பக்கம் சென்றவர்களை நம் பக்கம் கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கிறது. விஜயும் தன்னை சிறுபான்மை காவலனாக காட்டிக் கொள்ள மெனக்கெடுகிறார். திமுக பக்கம் இருக்கும் மிச்சம் மீதி சிறுபான்மை வாக்குகள் விஜய் பக்கம் வந்து, திமுகவை பாஜக பக்கம் தள்ளிவிட்டால் மட்டுமே அவரால் நிம்மதியாக தூங்க முடியும். இதற்கிடையில் மாட்டிக்கொண்டது திருப்பரங்குன்றம். யார் இஸ்லாமியர்களுக்கு விசுவாசமாக இருப்பது என்று காட்டிக்கொள்வதில் திமுகவுக்கும், த வெ கவுக்கும் போட்டி நடக்கிறது. ஒருவேளை விஜய் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்த முயன்றிருந்தால் அதை வைத்து மிகப்பெரிய அரசியல் செய்திருக்கும் திமுக. எனவே விஜய்க்கு வேறு வழியில்லை. ஓட்டு எனும் ஆயுதத்தை வைத்து தங்களுக்கு தேவையானதை எல்லாம் சாதித்துக் கொள்கிறார்கள் சிறுபான்மை மக்கள். திருப்பரங்குன்றத்தில் மலை உச்சி முழுவதையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக முயற்சி செய்து வருகிறார்கள். மலையுச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பு அதற்கு தடையாக வந்திருக்கிறது. அவர்களே சொல்வது போல 150 ஆண்டுகளாக தீபம் ஏற்றவில்லை, 150 ஆண்டுகளாக முருகனுக்கு சொந்தமான அந்த இடத்தை நாம் பயன்படுத்தவில்லை. இனிமேலும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை எதிர்ப்புகளும். இஸ்லாமியர்களுக்கு தங்களது விசுவாசத்தை காண்பிக்க இங்குள்ள கட்சிகள் போட்டி போட்டு வேலை செய்கின்றன. இஸ்லாமியர்கள் ஓட்டு போடாத அதிமுகவும், நாம் தமிழருக்கு கூட நப்பாசை. அந்தளவு இங்கே சிறுபான்மை அப்பீஸ்மென்ட் அரசியல் இங்கே நடக்கிறது. ஓட்டுக்காக கோயிலுக்கு சொந்தமான, முருகனுக்கு சொந்தமான இடத்தை தாரை வார்க்க துடிக்கிறார்கள். அதை எதிர்த்து கேள்வி கேட்டால் கலவரம் வந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இவ்வளவு தான் இங்கே அரசியல். ஒரு முறை தீபம் ஏற்றிவிட்டால் அந்த இடம் முருகனுக்கு சொந்தமான இடம் என்பது உறுதியாகிவிடும். அப்படி ஒன்று நடந்து விடக்கூடாது என்பதற்கு தான் இத்தனை நாடகங்களும். அந்த முருகன் தான் இந்துக்களுக்கு புத்தியை கொடுக்கணும்.
நாங்க என்ன பாகிஸ்தானிலா தீபம் ஏற்ற சொன்னோம்? இந்தியாவில்தானே , அதுவும் மசூதிக்கு அல்லது சர்ச்சுக்கு உள்ளேயா ஏற்ற சொன்னோம் ? , கோவிலுக்கு சொந்தமான , அதுவும் ஹிந்து முறைப்படி கட்டப்பட்ட தீப தூணில்தான் தீபம் ஏற்ற சொல்றோம் ? என்று , மறுபடியும் சுப்ரிம் கோர்ட்டு , தமிழ்நாட்டு அரசுக்கு ஓங்கி மண்டைல குட்டு வச்சிருச்சுன்னா ? , அப்பறம் , அவமதிப்பு ன்னு ஏதாவது பெனால்டி போட்டுட்டாங்கனா? ,