உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஆண்டுகளாக உ.பி., பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை

2 ஆண்டுகளாக உ.பி., பெண்ணுக்கு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை தொகை, உத்தரபிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு இரண்டு ஆண்டுகளாக செல்வது, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அளிக்கப்பட்ட மனு வாயிலாக தெரியவர, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 50. இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kwqawh80&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருக்கு எந்த தகவலும் இல்லாததால், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஜூலை, 25ல் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மீண்டும் விண்ணப்பித்தார். மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், 'உங்களுக்கு இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. வங்கி கணக்கை சரிபாருங்கள்' என, கூறினர். அதன்பின், கிணத்துக்கடவு, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியில் விசாரித்தார். ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், உங்கள் ஆதார் எண்ணுடன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்குக்கு, மகளிர் உரிமைத்தொகை மாதம்தோறும் செல்வதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, இந்த விபரங்களை குறிப்பிட்டு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், செப்., 11ல் மனு அளித்தார். அதில், இரண்டு ஆண்டுகளாக, வேறு ஒருவரின் வங்கி கணக்குக்கு சென்றுள்ள மகளிர் உரிமை தொகையை மீட்டு, தன் வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். கிணத்துக்கடவு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பானுமதி கூறுகையில், ''மகளிர் உரிமைத்தொகை சென்னையில் இருந்து, பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட பயனாளியின் வங்கி கணக்குக்கு, பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

தவறு எங்கு நடந்தது?

மகேஸ்வரி மனுவை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தவறு எங்கு நடந்தது; மகேஸ்வரியின் ஆதார் எண்ணுடன், வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கு எண் எப்படி இணைக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த சம்பவத்தால், மகளிர் உரிமைத்தொகை பயனாளர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சுந்தரம் விஸ்வநாதன்
செப் 17, 2025 16:48

இந்த இரு உரிமைத்தொகை என்பது ஆரம்பத்தில் வட்ட செயலாளர் சிபாரிசுக்களுக்கெல்லாம் வழங்கினார்கள். பல பணக்கார வீட்டுப் பெண்கள் கார் ஏசி போன்ற பல வசதிகள் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. கிடடத்திட்ட இட ஒதுக்கீடு ரிசர்வேசன் போலத்தான் இதுவும் போல இருக்கிறது


Padmasridharan
செப் 15, 2025 08:55

யாரோ அரசாட்கள் செஞ்ச தப்புக்கு இவங்க மனு அளிச்சு அலையனுமா சாமி. .


K V Ramadoss
செப் 14, 2025 17:24

இது பாங்க் ஆப் பரோடாவின் தவறு. எப்படி ஆதார் எண் தமிழகத்தில் இருக்க வேறு மாநிலத்தில் பாங்க் கணக்கு தொடங்கப்பட்டது ? கணக்கு தொடங்கிய அந்த பாங்க் ஊழியரை பிடிக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 12:53

இங்கே டீம்கா எடுப்பு எவனுமே முட்டுக்கொடுக்க வரலையே


Shivakumar
செப் 14, 2025 10:57

நம்ம அப்பா தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை. உ.பி. இருக்கும் பெண்ணுக்கும் அப்பாதான். அதனால் தான் மகளிர் உதவி தொகை வழங்கி உள்ளார்...


Sun
செப் 14, 2025 10:00

நல்ல வேளை! நம்பர் 25, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் முகவரிக்கு அனுப்பாம விட்டாங்கலே?


Barakat Ali
செப் 14, 2025 09:44

ஊ ஊ பீயி ஸ், எப்படி முட்டு கொடுப்பீங்க?? முதல் தவறு தமிழக அரசின் தவறு .... கவனம், பொறுப்பு, சரிபார்ப்பு இல்லை ....


Kalyanaraman
செப் 14, 2025 09:40

பல நிர்வாக சீர்கேடுகளில் இதுவும் ஒன்று.


தமிழன்
செப் 14, 2025 09:27

என்ன ஒரு அற்புதமான நிர்வாகம்


Natarajan Ramanathan
செப் 14, 2025 09:07

அந்த உத்திரபிரதேச மஹேஸ்வரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை