உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக சேவைக்கான விருது: 3 பேருக்கு அறிவித்தார் தமிழக கவர்னர்!

சமூக சேவைக்கான விருது: 3 பேருக்கு அறிவித்தார் தமிழக கவர்னர்!

சென்னை: சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த சொர்ணலதா, மதுரையை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=il30tsgp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த சொர்ணலதா, மதுரையை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான கவர்னர் விருதுகள் வழங்கப்படும். சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கடந்த 33 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு உதவுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.கோவையை சேர்ந்த சொர்ணலதா, நரம்புத்தசை கோளாறுகள் மற்றும் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளார். மதுரையை சேர்ந்த ராஜ்குமார் வீதிகளில் வாழும் முதியோர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலமற்ற முறையில் சேவை செய்து வருகிறார்.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிட்லபாக்கம் ரைசிங் தொண்டு அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்படும். இந்த தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வை பரப்புதல், நீர்நிலைகள் மேலாண்மை, பசுமையாக்கம், கழிவு மேலாண்மை போன்றவற்றில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. சமூக சேவை விருதிற்கு தலா ரூ.2 லட்சமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதிற்கு ரூ.5 லட்சமும் விருது தொகை வழங்கப்படும். சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு வரும் ஜனவரி 26ம் தேதி, சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Alagusundram Kulasekaran
ஜன 14, 2025 06:26

டாஸ்மாக் கடைகளில் முதல்வர் துணமுதலவர் முன்னால் முதல்வர் கருணாநிதி போன்றோர் படங்களை கட்டாயம் மாட்டி தமிழ்க மக்களை குடிகார்களாகிய பெருமைவாய்ந்த தலைவர்கள் என பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்


RRatz
ஜன 14, 2025 13:13

முற்றிலும் உண்மை. திராவிட approach


அசோகன்
ஜன 13, 2025 15:38

இதையே எங்க திமுக தலைவுரு கிட்ட கொடுத்திருந்தா..... அதிக சாராயம் விற்க படுப்பட்டவர்.... அதிக போதை பொருள்களை சதுர்யமாக கடத்தி அரும்பாடு பட்டு விற்றவர்..... அதிக பெண்களை விரட்டி விரட்டி கற்பழித்த மாவீரர்களுக்கு கொடுத்திருப்பார்......இப்படி வீணடித்து இருக்கமாட்டார்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 13, 2025 21:10

அத்துடன் சாதியை ஒழித்தவர் என்று சொல்லி சாதி வெறியருக்கு சாதி பெயரால் உள்ள அம்பேத்கர் விருதும் அப்பர் வீட்டு பணத்திலேயே கொடுத்திருப்பார் நமது ஒன்றிய முதல்வர்


Sidharth
ஜன 13, 2025 14:15

சொந்த பணத்திலா


Viswanathan Venkatraman
ஜன 13, 2025 19:05

ஆம். பேனா வைப்பது போல தான் இதுவும்


K Manikandan
ஜன 13, 2025 20:58

கலைஞர் பேரை ஊர்ஊரா வைக்கரான்களே சொந்த இடத்துல தான் கட்டடம் கட்டி பேருவைக்கறாய்ங்களா


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 13, 2025 21:08

கள்ளச்சாராயத்துக்கு ஊக்குவிப்பு தொகை அப்பர் வீட்டுப்பணத்திலா கொடுக்கப்பட்டது?


nalledran
ஜன 13, 2025 13:37

இரட்டிப்பு மகிழ்ச்சியே


திகழ்ஓவியன்
ஜன 13, 2025 13:08

அரசியல் சாசனம் பாரதம் என்று எங்கு இருக்கிறது , இந்தியா என்று தானே இருக்கு, மஹாபாரதத்தில் தான் பாரதம் இருக்கு .இந்தியா எனும் நாட்டை மதிக்காமல்... பாரதம் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் டபுள் டாகுமென்ட் புகழ்... சனாதனி ஆர்எஸ்எஸ் ரவி..இது மிகத் தீவிரமான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வருக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட விமரிசனம். தமிழக அரசின் சார்பில் ஆளுநர் ரவிக்கு எதிராக மானநஷ்ட வழக்கும், சமூக மறும் பொது அமைதியைக் குலைக்க சதி செய்ய முயன்றதற்கான வழக்கும் தொடுக்கப்பட வேண்டும்.


தமிழ்வேள்
ஜன 13, 2025 13:19

இந்த தேசம் என்றுமே பாரதம் மட்டுமே.. சில கும்பல் வைத்த பெயரை பயன்படுத்தவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு எந்த நிர்பந்தமும் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும், தேசபக்தி தெய்வபக்தியற்ற நாத்திக திருட்டு ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையில் மட்டுமே நம்பிக்கையுள்ள , கட்சியின் தலைவர்கள் தொண்டர்களுக்கு மதிப்போ மரியாதையோ தரவேண்டிய அவசியமும் கிடையாது ....மாநில அரசின் ஆளும் கட்சி கும்பல் அறிவிக்கும் விருத்தாளர்கள் அனைவரும் சமூகத்துக்கு எதிரான, ஆபிரகாமிய ஒழுக்கம் கேட்ட கும்பலாளர்கள் மட்டுமே ..உங்கள் கேஸ் எதுவும் எந்த கோர்ட்டிலும் நிற்காது. பாரத கோர்ட்கள் திருட்டு திராவிட கட்டை பஞ்சாயத்துகள் அல்ல ...


CHELLAKRISHNAN S
ஜன 13, 2025 13:54

pl look the rupees n coins where it is written in Bharat sarkar in Hindi. India is only in English version. even the g.o.s are like that only. Tamil Nadu government is Tamil Nadu arasu in Tamil. pl verify once again.


ஆரூர் ரங்
ஜன 13, 2025 15:20

அரசியல் சாசனத்தின் துவக்கத்திலேயே இந்தியா எனும் பாரத் எனத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது? போய் படித்துவிட்டு எழுதவும். மேலும் ஈவேரா கூட ஹிந்து என்பது இந்தியனைத்தான் குறிக்கும் என்று( ஆதாரம் பெரியார் ஈவேரா சிந்தனைகள் புத்தகம்) எழுதினார்


xyzabc
ஜன 13, 2025 12:55

thanks for honoring the deserving people, Gov sir.


திகழ்ஓவியன்
ஜன 13, 2025 12:52

சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி விருதுகள் வழங்கி கவுரவிப்பார் : இவர் சொந்த செலவில் கொடுப்பாரா இல்லை இதற்கும் தமிழக அரசு கொடுக்கனுமா இதற்க்கு இவர்க்கு அதிகாரம் இருக்கா இல்லையோ எதிர்க்கும் கோர்ட்டுக்கு வழக்கு போகும் என்று தெரிகிறது


veera
ஜன 13, 2025 17:04

ஒரு ஆனியும் புடுங்க முடியாது


தமிழ்வேள்
ஜன 13, 2025 20:53

கவர்னரது ஒவ்வொரு ரூபாய் செலவும் மாநில அரசின் கடமை... கேள்வி கேட்கவோ ஆட்சேபணை சொல்லவோ மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை.. மாநில அரசு என்பது கவர்னர் நடத்துவது... மாநில அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை சபை மட்டுமே.. நிர்வாகத்தில் உதவுவது மட்டுமே அவர்கள் வேலை.... அரசியல் சட்டப்படி.


முக்கிய வீடியோ