உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக தொழில்கள் நசிகின்றன ஸ்டெர்லைட் ஆலையை திறங்கள்: தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

தமிழக தொழில்கள் நசிகின்றன ஸ்டெர்லைட் ஆலையை திறங்கள்: தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'தமிழகத்தில், 1,000 சிறு, குறு தொழிற்சாலைகளை பாதுகாக்க, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்' என, தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.இதுகுறித்து, ஸ்ரீ அன்னம் கெமிக்கல் நிறுவனத்தின் இயக்குநர் கோபால், 'சார்ட்டின் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட்' இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது, நாட்டின் மொத்த காப்பர் தேவையில், 25 முதல் 30 சதவீதம் தயாரித்து வழங்கியது. உரத்தொழிலுக்கான மூன்று மூலப்பொருட்களும் கிடைத்தன. இந்த ஆலையை நம்பி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1,000 சிறு, குறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதனால், ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.

தொழில்கள் பாதிப்பு

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடி, எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மேற்கண்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். துாத்துக்குடியில் இருந்து, காப்பர் ஏற்றுமதி செய்யும் நிலை மாறி, தற்போது இறக்குமதி செய்து வருகிறோம். இதன் வழியே, வெளிநாடுகள் வருமானம் ஈட்டுகின்றன. இதனால், சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், அந்நிய செலாவணியும் கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.சீனா ஏற்றுமதியை குறைத்தது, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவற்றால், நம் நாட்டில் உரம் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பாக, உரத்தின் இருப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். எனவே, சட்டத்துக்கு உட்பட்டு, அனைத்து விதிகள், பாதுகாப்பை உறுதி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை, மீண்டும் மத்திய, மாநில அரசுகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, விழிஞ்ஞம் துறைமுகம், அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்காற்றி வருகிறது. அம்மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில், அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் துறைமுகம் உருவாக்க, எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல கட்சிகள் போராட்டம் நடத்தின.

நடவடிக்கை தேவை

ஆனால், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில், வளர்ச்சி பணிகளுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துவதில்லை. அதுபோல், குஜராத், ஆந்திரா மாநிலங்களில், அதிக அளவில் புதிய தொழிற்சாலைகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்தில், தென் மாவட்டங்களில், புதிய தொழிற்சாலைகள் துவக்க நடவடிக்கை வேண்டும். குளச்சலில் துறைமுகம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sasikumaren
ஜூலை 05, 2025 04:20

ரசாயன தொழிற்சாலைகளை ஏன் தார் பாலைவனத்தில் தயாரிக்க கூடாது அங்கு விவசாயமும் இல்லை தண்ணீர் வேண்டும் என்றால் சிந்து நதி நீரை பைப் போட்டு எடுத்து கொள்ளலாமே அல்லது கேரளாவில் தாராளமாக தண்ணீர் இருக்கிறது அதனால் ரசாயன நிறுவனங்களை அங்கு ஆரம்பிக்கலாமே இதற்கு எந்த படித்த மூடர்கள் தடை சொல்ல போகிறான்.


sasikumaren
ஜூலை 05, 2025 04:13

ஆக சரியான குடிநீர் கிடைக்காமல் எத்தனை ஆயிரம் பேர் செத்தாலும் பரவாயில்லை அந்த விஷ நிறுவனத்தை தடை செய்ய பல பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை உனக்கு காசு மட்டும் தான் முக்கியம்.


Gajageswari
ஜூலை 04, 2025 20:58

இது போல் மாபியா கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறுவ தடை ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் பரவும் அபாயம்


ஆரூர் ரங்
ஜூலை 04, 2025 14:33

வெறும் 6000 கோடி முதலீட்டை ஈர்க்க நாடு நாடாக பறந்து சென்று கெஞ்சினார். ஆனால் நாட்டின் சுயசார்புக்கு உதவிய 20000 கோடி மதிப்புள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தார்.(அதற்கு பதிலாக சூழ்நிலை பாதிப்பை சரிசெய்ய உதவியிருக்கலாம்.) அதேநேரத்தில். நொய்யல் பவானி காவிரி ஆறுகளில் ஜவுளி சாயக்கழிவுநீர் ஓடி டெல்டா நிலங்கள் பாதிப்படைந்து வருவதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். ஆக வாக்கு வங்கியும் லஞ்சமும்தான் எந்த ஆலை எது நல்லது கெட்டது என்பதைத் தீர்மானிக்கின்றனவா?


Natarajan Ramanathan
ஜூலை 04, 2025 05:02

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதே அங்கு உள்ள கிறித்தவமத ப்ரோக்கர்கள்தான். அவர்களை ஒழித்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வெற்றிகரமாக செயல்படமுடியும்.


Kasimani Baskaran
ஜூலை 04, 2025 04:02

தீமக்காவுக்கு கெளரவ பிரச்சினை. திறக்க வாய்ப்பில்லை.


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2025 02:31

கமிஷன் கிடைக்காததால், ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டார். இதனால் காப்பர் விலை விண்ணை நோக்கி உயர்ந்து செல்கிறது. இதனால் கட்டிடங்களின் விலையும் உயர்கிறது. வாடகை உயர்கிறது. தமிழர்கள் வீடு வாங்க முடியாமல் போனால், அதற்க்கு காரணம் ஸ்டாலின் தான்.


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2025 02:28

ஸ்டெர்லைட் ஆலை தமிழக தொழிற்சாலையின் உயிர் மூச்சு. ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட்டின் கழுத்தை நெறிப்பதன் வாயிலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள் . உடனடியாக ஆலையை திறக்க வேண்டும். தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசே ஆலையை திறக்க வேண்டிய நிலை வந்தால், முதல்வருக்கு உள்ள அதிகாரம் மேற்கொண்டு குறைக்கப்படும். அதற்கு முன்னரே, ஸ்டாலின் ஆலையை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும்.


SUBBIAH RAMASAMY
ஜூலை 04, 2025 10:21

இப்போ திற திற என்று கூவும் இவர்கள் கூட்டம் போராட்டம் நடத்தும் போது அவர்கள் ஏன் எதிர்ப்பு குரல் கொடுக்க வில்லை. மேலும் இந்த எட்டு வருடங்கள் கழித்து அவர்கள் திடீர்னு முழிச்சிட்டாங்க இவ்வளவு காலம்என்ன பண்ணாங்க


சமீபத்திய செய்தி