உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் பீஹார் அல்ல: சொல்கிறார் துரைமுருகன்

தமிழகம் பீஹார் அல்ல: சொல்கிறார் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழகம் பீஹார் அல்ல. மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.அவர் அளித்த பேட்டி: திமுக கூட்டணி சிதறும் என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் போகிற போக்கில் பேசுகிறார். பாவம். ஏதாவது பேச வேண்டும் என்று தான். இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர். எங்களுக்கு ஆதரவாகவா பேசுவார். விஜய் கட்சி நிகழ்ச்சிக்கு திமுக தடை என சொல்லும் தவெகவின் ஆனந்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனது அரசியல் சர்வீஸ் வேறு. அவர்களது அரசியல் சர்வீஸ் வேறு. தமிழகத்துக்கு எப்படியாவது கெட்ட பெயர் வேண்டும் என பிரதமர் நினைத்தால் அது நல்லது அல்ல. அப்படி நினைப்பாரா என சந்தேகம் உள்ளது. ஆனால் நிலைமை அப்படி தான் உள்ளதுஅன்புமணி நீக்கப்பட்டது, அவர்கள் வீட்டுக்குள் நடக்கும் சமாச்சாரம் நமக்கு எதுக்குதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், ' தமிழகம் பீஹார் அல்ல. தமிழகம் என்பது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம். அங்குள்ளது போல், இங்கு நிர்வாகம் இல்லை. இங்கு ஸ்டாலின் தலைமை உள்ளது. இதுபோன்ற தந்திரங்கள் தமிழகத்திலோ அல்லது தலைவரிடம் வேலை செய்யாது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Madras Madra
செப் 12, 2025 13:10

ஆமா அதை விட மோசம்


venugopal s
செப் 12, 2025 11:48

நிச்சயமாக, பீகார் உத்திரப் பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களை விட தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ளது என்பது உண்மையே!


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 12, 2025 11:08

குவாட்டர் பிரியாணி ஆயிரம் ரூபாய் இந்த விழிப்புணர்வு உள்ள மாநிலம்.


dandanakka
செப் 12, 2025 08:34

காசு கொடுத்தால் ஓட்டு போடும் மாநிலம். முதன்மை மாநிலம். திராவிடியாத மாநிலம்.


vadivelu
செப் 12, 2025 07:28

பீஹார் தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு இது ஒன்றே போதும். பிஹார் மக்களுக்கு பிரஷாந்த் கிஷோர் உட்பட யாருக்கும் விழிப்புணர்வு இல்லை என்று பிரச்சாரம் செய்ய பாஜாகா தயாராகி விட்டது.


Rajasekar Jayaraman
செப் 12, 2025 07:23

தமிழகம் பிகராக இருந்தால் இந்நேரம் நீங்கள் எல்லாரும் புழலில் இருக்க வேண்டி இருக்கும் தமிழனை ஏமாற்றி தப்பித்திருக்க முடியாது.


Ragupathy
செப் 11, 2025 21:28

பீகாரை விட மோசமக உள்ளது... விழிப்புணர்வா...200குடுத்தா ஓட்டுப் போடற ஜென்மங்கள் நம் மக்கள்...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 11, 2025 21:22

பாஸ் இதெல்லாம் அங்க வாட்ஸாப்ப் group ல ஓடுதாம் , ஜெயிக்க வேண்டிய காங்கிரஸ் கூட்டணி விடியல் புண்ணியத்தில் 10 சீட் குறைவா வாங்கி எதிரி கட்சியாவே இருக்குமாம் ,இன்னும் நெறய திட்டுங்க அப்போ தான் காங்கிரஸ் அங்க ஊத்திக்கும்


Vasan
செப் 11, 2025 21:11

Honourable Mr.Durai Sir, Rajini Sir already TOLDED that you are not leaving the school class even after passed that class. Why Sir?


Natarajan Ramanathan
செப் 11, 2025 20:58

கேடி முருகன் சொன்ன இந்த பொன்னான கருத்தை ஏன் தத்தி சுடலை போன வாரம் பீஹார் சென்றபோது அங்கே சொல்லவில்லை?


புதிய வீடியோ