உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களின் நம்பிக்கை இழந்த தமிழக போலீசார்; கடற்படை வீரருக்கு ஆதரவாக அண்ணாமலை வாய்ஸ்

மக்களின் நம்பிக்கை இழந்த தமிழக போலீசார்; கடற்படை வீரருக்கு ஆதரவாக அண்ணாமலை வாய்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தன்னுடைய பாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்படும் போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட இந்திய கடற்படை வீரருக்கு ஆதரவாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் இளமாறன், தமிழக போலீசாரைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,' 2024 ஜன., மாதம் தன்னுடைய பாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். குற்றவாளியை கைது செய்ததாக போலீசார் அன்று கூறினர். ஆனால், யாரையும் அப்போது கைது செய்யவில்லை. இந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும், இதுவரையில் ஒருவரை கூட சிவகங்கை போலீசார் கைது செய்யவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c1u9yjkk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுவே சிவகங்கை டி.எஸ்.பி., எஸ்.பி., வீட்டில் நடந்திருந்தால் ஒரு மணிநேரத்தில் குழு அமைத்து குற்றவாளியை பிடித்திருப்பார்கள். சாதாரண மக்கள் என்றால் இப்படியா? இது தொடர்பாக எஸ்.பி., ஆபிசில் என்னுடை அப்பா 6 முறை புகார் கூறியிருப்பார். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னை ஒரு கிரிமினலாக ஆக்கிவிட வேண்டாம். இந்த வீடியோவை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என கேட்டுக்கொண்டார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்; தமிழக போலீசார் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இது ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் ஆகும். இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்காக சேவை செய்யும் இந்த அதிகாரியின் பாட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதுவரையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியையும் கைது செய்யவில்லை. விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

INDIAN Kumar
ஜன 11, 2025 18:03

விடியல் தரேன்னு சொன்னார் ஆனால் இன்னும் இருட்டாவே இருக்கு சட்டம் ஒழுங்கு சுத்த மோசம் ஆயிரம் கொடுப்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது மக்கள் புரட்சி மாடல் ஆட்சியை வீழ்த்தும் ஆனால் மாற்று திராவிட காட்சி மாற்று அல்ல புதிய சக்தி வரட்டும்.


Madras Madra
ஜன 11, 2025 13:52

என்ன செருப்பால அடிச்ச பாட்டிய கண்டு பிடிக்கறதுல நான் கொஞ்சம் பிஸி வீரரே


Kanns
ஜன 11, 2025 11:54

Sack& Punish All Concerned Police Esp. Failed& MegaLootSharing Superior


Kalyanaraman
ஜன 11, 2025 07:41

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல திமுக அரசு செயல்படுகிறது. மாரிதாஸ், ரங்கராஜன் நரசிம்மன் போன்று அரசின் கோர முகத்தை தோலுரித்து காண்பிப்பவர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறது. ஏனெனில் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள் அனைவரும் திமுகவில் நிர்வாகிகளாக உள்ளனர். மக்கள் திருந்த வேண்டும். பணத்தை வாங்கிக்குங்க ஓட்டை மட்டும்.....


raja
ஜன 10, 2025 22:05

பல வருடங்கள் ஆகிவிட்ட அமைச்சர் நேருவோட தம்பி ரமாஜயத்தை கொலை செய்தவர்களையே இன்னும் தமிழக போலீஸ் கண்டு பிடிக்கல..கொலை செய்யபட்டு ஒரு வருசம் தானே ஆகுது கொஞ்சம் பொறுங்க என்று நமது முதல்வர் கூறுவாரோ...


Ganapathy
ஜன 10, 2025 20:49

நாங்கதான் பாட்டி போலீசே வச்சுருக்கோமே. பாட்டி உயிரோட இருந்தா அரெஸ்ட் பாட்டியதான் பண்ணுவோம். அதனால இதையெல்லாம் கண்டுக்கப்படாதுன்னா கண்டுக்கப் படாதுன்னு தான். இதாண்டா திராவிடமாடல் ஆட்சில நீதிபரிபாலனம். ஏன்னா நாங்க மனுநீதி சோழன் அவதாரம்.


நிக்கோல்தாம்சன்
ஜன 10, 2025 20:49

காவல்துறையை கண்ட்ரோலில் வைத்திருக்கும் முதல்வர் சார் தயவு செய்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டு வரவேண்டும் , முடிந்தால் காவல்துறையை கலைத்துவிட்டு மீண்டும் புது வாரியம் தொடங்கலாம்


Ramesh Sargam
ஜன 10, 2025 19:47

இந்திய கடற்படை வீரரின் பாட்டியின் கொலையாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வரின் படத்தில் மண் வீசிய பாட்டியை தேடிக்கண்டுபிடிக்க ஒரு தனிப்படை. என்னவொரு அயோக்கியத்தனம்.


Ramesh Sargam
ஜன 10, 2025 19:44

எத்தனை அமரன் படம் வெளிவந்தாலும், இந்த திருட்டு அயோக்கிய திமுகவினரை திருத்தவே முடியாது.


A.N.Mani
ஜன 10, 2025 17:25

திமுக அரசு டாஸ்மாக் விரிவாக்கத்துக்கு மட்டுமே அக்கரை எடுக்கும்.


முக்கிய வீடியோ