உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குதிரை ஏற்றப்போட்டி தமிழக போலீசுக்கு 5 பதக்கம்

குதிரை ஏற்றப்போட்டி தமிழக போலீசுக்கு 5 பதக்கம்

சென்னை : தேசிய அளவில், காவலர்களுக்கு இடையே நடந்த, குதிரை ஏற்றப்போட்டியில், தமிழக போலீசார், தங்கம் உட்பட, ஐந்து பதக்கங்களை வென்றனர். அரியானா மாநிலத்தில் உள்ள, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, அடிப்படை பயிற்சியகத்தில், கடந்த, 10ம் தேதியில் இருந்து, 25ம் தேதி வரை, காவலர்களுக்கு தேசிய அளவிலான குதிரை ஏற்றப் போட்டி நடந்தது.மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் தமிழக காவல் துறையின் குதிரைப்படையைச் சேர்ந்த 25 போலீசார், 10 குதிரைகளுடன் பங்கேற்றனர். இப்போட்டியில், தமிழக காவல் துறையின் குதிரைப்படை அணி, ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் என, ஐந்து பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற போலீசாருக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி