உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூரியசக்தி மின்சாரம் நிறுவு திறனில் மூன்றாவது இடம் பிடித்த தமிழகம்

சூரியசக்தி மின்சாரம் நிறுவு திறனில் மூன்றாவது இடம் பிடித்த தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் கடந்த செப்டம்பர் நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவுதிறன், 9,270 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. நாட்டில் சூரியசக்தி மின் நிறுவு திறனில், தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சொந்த பயன்பாடு அல்லது மின் வாரியங்களுக்கு விற்க, அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கின்றன. இதுதவிர, கட்டடங்கள் மற்றும் விவசாய நிலங்களில், குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. நாட்டில், செப்., 30ம் தேதி நிலவரப்படி, மாநிலம் வாரியாக உள்ள சூரியசக்தி மின் நிறுவு திறன் விபரத்தை, தற்போது மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை வெளியிட்டுள்ளது. அதில், ராஜஸ்தான் ஒட்டு மொத்தமாக, 24,224 மெகாவாட் சூரியசக்தி மின் நிறுவு திறனுடன் முதலிடத்திலும்; குஜராத், 15,120 மெகாவாட் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அடுத்து தமிழகம், 9270 மெகா வாட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா, 8930 மெகா வாட் உடன் நான்காவது இடத்திலும்; மஹாராஷ்டிரா, 7500 மெகா வாட் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. கடந்த ஜூன் நிலவரப்படி, ராஜஸ்தான் முதலிடம்; குஜராத் இரண்டாமிடம் இருந்த நிலையில், கர்நாடகா, 8,819 மெகா வாட் உடன் மூன்றாவது; தமிழகம், 8,617 மெகா வாட் திறனுடன் நான்காவது இடத்தில் இருந்தன. தற்போது, கர்நாடகாவை பின்னுக்கு தள்ளி, தமிழகம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Parameswaran Vellakutty
அக் 13, 2024 23:13

1 month,2500 langam


GoK
அக் 12, 2024 09:46

நீங்கள் உங்கள் வீட்டில் கூரைமேல் சூரிய மின்சார அமைப்பு நிறுவி இருக்கிறீர்களா, அதற்க்கு மின்வாரியத்திலிருந்து ஒப்புதல் பெற புது மீட்டர் அமைக்க எத்தனை நாட்கள், எவ்வளவு காசு முறைக்கு மேல் செலவு செய்ய வேண்டும் ...இவற்றையும் பிரசுரியுங்கள், உபயோகமாக இருக்கும். இதுவும் பிரதமர் திட்டத்தால் நடக்கிறது நான் முதல்வன் திட்டத்தால் வந்தால் அதுவும் காலி...தேன் எடுப்பவன் கையை நக்குவான் தெரியும் கையையே சாப்பிடுவது திராவிட மாடல்.


பாமரன்
அக் 12, 2024 08:32

பாலைவன பகுதிகளைக் கொண்டுள்ளதால் சூரிய மின் உற்பத்தி நிறுவு திறனில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் முதல் இரண்டு இடங்களில் எப்போதுமே தொடரும்... ஆனால் வருடாந்திர உற்பத்தி அளவுகள் தென்மாநிலங்களைவிட குறைவாக அவ்வப்போது வரும். காரணம் கால நிலை... தமிழ் நாட்டில் இடப்பற்றாக்குறை மற்றும் நில விலை அதிகம் என்பதால் அதிக இடம் புடிச்சு புதிய கெபாசிட்டி இனி அதிகம் வராது. ஆனால் பில்டிங்குகள் மற்றும் ஃபேக்டரி கூறைகள் மேலே சூரிய மின் உற்பத்தி தகடுகள் பொறுத்தி உற்பத்தி செய்ய ஒரு வலுவான திட்டத்தை செயல்படுத்தினால் நாட்டில் எப்போதுமே சூரிய மின் உற்பத்தி பங்களிப்பு தமிழ் நாட்டில் தான் அதிகம் இருக்கும்... ஏன்னா இங்கே தான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பதினைந்து மணிநேரம் வருடத்தில் குறைந்தது முன்னூறு நாட்கள் இந்த மின் உற்பத்தி நடக்க ஏதுவான காலநிலை இருக்கு. இப்போ பெயரளவில் இருப்பது அடுத்த லெவலுக்கு கொண்டு போகலாம்... ஆனால் செய்ய இந்த அரசியல்வியாதிங்க ஆர்வம் காட்ட மாட்டாங்க... ஏன்னா கலெக்சனுக்கு வாய்ப்பில்லை...


சண்முகம்
அக் 12, 2024 05:14

கவனியுங்கள். நிறுவு திறன். அதில் எத்தனை சரியாக வேலை செய்கிறது. மின் பெறுதல் திறன் எவ்வளவு?


முக்கிய வீடியோ