உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் கொடுக்குது மத்திய அரசு; வேண்டாம் என்கிறது தமிழகம்

பணம் கொடுக்குது மத்திய அரசு; வேண்டாம் என்கிறது தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில், தமிழகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 6,600 வீடுகளை குறைக்கவும், 3,324 வீடுகள் கட்டுவதை ரத்து செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில், பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு அடிப்படையில் வீடுகள் கட்டி கொடுப்பது; நிலம் வைத்துள்ளவர்கள் வீடு கட்ட நிதி வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f3miijyt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒப்புதல்

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்துக்கு, 5,264 திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில், 6.70 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 6.05 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய வீடுகள் கட்டும் பணி நிலுவையில் உள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம், சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த மத்திய அரசின் ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், 6,600 வீடுகள் குறைப்பு, 3,324 வீடுகள் கட்டுவதை கைவிடுவது தொடர்பான பரிந்துரைகளுக்கு, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வீடுகள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான ஆறு திட்டங்களில், 142 வீடுகள், பயனாளிகள் வீடு கட்ட மானியம் வழங்குவதற்கான, 1,254 திட்டங்களில், 6,458 வீடுகள் என மொத்தம், 6,600 வீடுகள் எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைக்கப்பட்டது.

பரிந்துரை

இதேபோன்று, ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பது தொடர்பான நான்கு திட்டங்களில், 3,264 வீடுகள், பயனாளிகள் வீடு கட்ட மானியம் வழங்குவதில், 14 திட்டங்களில், 60 வீடுகள் என மொத்தம், 3,324 வீடுகள் கட்டுவதை கைவிட, தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு, மத்திய அரசின் உயர்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் மக்கள் விரும்பாததும், நிலம் சரியான முறையில் அமையவில்லை என்பதும், இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாய்ப்பை மறுப்பது ஏன்?

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், எண்ணிக்கை குறைப்பு மற்றும் ரத்து தொடர்பாக, தமிழக அரசு பரிந்துரைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திட்டங்களில், மத்திய அரசிடம் நிதி கிடைக்கவில்லை என்று கூறும் தமிழக அரசு, மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிதியை மறுப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

RaNaMurty
ஜூன் 16, 2025 18:23

நிதிய குடுத்தா உதயநிதி சினிமா எடுக்கவும் நடிகைகளோடு ஜல்ஸா பண்ணவு.தான் போகும். நிதியும் வேணா மண்ணும் வேணா


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2025 11:35

இந்த மத்திய அரசின் திட்டத்தை ஸ்டிக்கர் போட்டு மாநில அரசு கூடுதலாக ஒரு இலட்சம் ரூபாய் தரம் குறைந்த மலிவு விலை சிமெண்ட் கம்பிகள் கொடுத்து கலைஞர் கனவு இல்லம் என்ற பெயரில் ஏதோ முழுவதும் தமிழக அரசு பணம் செலவு செய்து நடத்துவது போல் நடத்தி கொண்டு உள்ளது. இப்போது தமிழக அரசு எக்ஸ்ட்ரா செலவு செய்யும் தொகை கொடுக்க முடியாத அளவிற்கு பயணச் சிக்கல் அரசு கஜானாவிற்கு வந்து இருக்கலாம். ஆதலால் இப்போது இந்த திட்டம் செயல் படுத்தினால் முழுவதும் மத்திய அரசின் திட்டமாக செலவு செய்ய வேண்டி இருக்கும். அப்போது அந்த வீடுகளின் முன்பு தமிழக அரசின் இலட்சனை ஒட்டி கலைஞர் கருணாநிதி கனவு இல்லம் என ஸ்டிக்கர் ஒட்ட‌ முடியாத காரணத்தால் தமிழக அரசு மத்திய அரசின் பணம் வேண்டாம் என சொல்லியிருக்கும். மேலும் பக்கத்து கேரளா மாநிலத்தவர் இந்த திட்டத்தில் அதிக அக்கறை காட்டாமலும் இருந்திருக்கலாம் அதற்காக கூட இத்திட்டம் நிறுத்தி இருக்கலாம். அல்லது இப்போது வேண்டாம் என்று சொல்லி விட்டு வரும் 2026 தேர்தல் நேரத்தில் மத்திய அரசு தான் திட்டத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறி பாஜக மீது பழி போட்டு மேடையில் முழங்கவும் தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம். இதெல்லாம் போக வேறு ஏதாவது விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கலாம் உதாரணத்திற்கு சிமெண்ட் கம்பி சப்ளையில் கமிஷன் சரியாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் இருக்கலாம்.


metturaan
ஜூன் 13, 2025 09:52

ஏற்கனவே ஸ்டிக்கர் ஒட்டி கலைஞர் கனவு இல்லமாக நடத்தி வருகின்றனர்... அதில் வீடுகட்ட தகுதியான மகளிர் உரிமை தொகை போல நபர்கள் இத்தனை குறைந்த பணத்தில் கட்ட இயலாது என தெரிவித்ததால் கூட இருக்கலாம்...


sankaranarayanan
ஜூன் 13, 2025 09:48

எங்களுக்கு பணமாக கொடுத்தால்தான் நல்லது நாங்கள் அதை பகிர்ந்து கொள்ளுவோம் எந்த கண்டிஷனும் போடக்கூடாது நாங்கள் திராவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு ஆதலால் திராவிட மாடல் அரசியல் செய்யும் நாங்கள் அதை சரியாக எங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுவோம்


Rk Asso
ஜூன் 13, 2025 09:34

மாநில அரசு 62% நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் மத்திய அரசு தன் பெயரை போடுவதும் மாநில அரசின் நிதி நிலையும் தான் இந்த மாற்றத்திறு காரணம். இதை மறைத்து செய்தி போடுவது ஏன்?


venugopal s
ஜூன் 13, 2025 09:26

தமிழை தூக்கி எறிந்து விட்டு ஹிந்தியை ஏற்றுக் கொண்டால் கூடத்தான் நிறையவே காசு கொடுப்பார்கள். அதை தாய்மொழிப் பற்று இல்லாத மற்றவர்கள் செய்து கொள்ளட்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2025 11:41

தாய் மொழி தமிழில் தான் ஆரம்ப கல்வி ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இருக்கும் வேண்டும் என்பதற்கு கொடுக்கும் நிதியைத்தான் தமிழ் வளர்க்கும் தமிழக அரசு வாங்காமல் தமிழ் வழியில் ஆரம்ப கல்வி ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தரமாட்டேன் என்று புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் உள்ளது.


புரொடஸ்டர்
ஜூன் 13, 2025 08:44

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, பாஜக ஆட்சி இல்லாத எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை மத்திய அரசு பதவியில் இருக்கும் பாஜக விடுவித்தில்லை என்ற ஆதாரங்கள் உள்ளன. அதிக அளவில் வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு என அனைவருக்கும் தெரியும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 13, 2025 07:13

ஏழைக்கு வீடா முக்கியம்? ஏழை வீட்டில் இருந்தாலென்ன, ரோட்டில் இருந்தாலென்ன எந்த திட்டத்திலும் ..ஸ்டிக்கர் ஒட்டமுடியுமா முடியாதா? ஸ்டிக்கர் ஒட்டமுடியாத திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.. போவீங்களா நமக்கு பேர் முக்கியம்


Ramaraj P
ஜூன் 13, 2025 06:38

தமிழ்நாட்டில் மூன்று மாவட்டம் மட்டுமே தமிழ்நாடு gdp ல கிட்டத்தட்ட 60-70% கொடுக்கிறது.


Murugan Gurusamy
ஜூன் 13, 2025 17:13

மூன்று மாவட்டத்தில் எல்லாம் உபி பீகார் லியா இருக்கு, இது 70000 ஆம் ஆண்டு தமிழ் மண், சென்னைல, கோவைல, அரியலூர், ராமநாதபுரம் எல்லாம் நாங்கள் அண்ணன் தம்பிகள் ரத்தம் சொந்தம்.


RAMESH
ஜூன் 13, 2025 06:09

இதில் கமிஷன் அடிக்க முடியாதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை