உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய் சாடல்

மக்களை ஏமாற்றும் தமிழக ஆட்சியாளர்கள்: விஜய் சாடல்

சென்னை : '' சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து தமிழக ஆட்சியாளர்கள் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர்,'' என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. எனவே தான், பீகார் மாநில அரசும் கர்நாடக மாநில அரசும் ஏற்கெனவே சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலுங்கானா மாநில அரசும் வெறும் ஐம்பதே நாட்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை (Caste Survey) நடத்தி முடித்திருக்கிறது. அது மட்டுமின்றி, ஒருபடி மேலே சென்று, அந்த ஆய்வு அறிக்கை மீது சட்டசபையின் சிறப்பு அமர்வுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கவும் தொடங்கி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ybz2zic3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களைப் பின்பற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. இத்தனைக்குப் பிறகும், தமிழகத்தை ஆளும் தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர். சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் மத்திய அரசு நடத்த வேண்டும். ஆனால். அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா? அப்படியெனில், தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி? அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி, சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்து, விவாதம் நடத்துவதும் எப்படி? மற்ற மாநிலங்கள் போல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட தமிழகத்தில் நடத்தவில்லையே, ஏன்? இப்படி, எத்தனைக் கேள்விகள் கேட்டாலும், தற்போதைய ஆட்சியாளர்கள். அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில், ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி, சமத்துவ நீதி. சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Laddoo
பிப் 09, 2025 09:10

புஸ்ஸி எழுதியதை தன் அறிக்கையாக காட்டிக் கொள்ளும் கேரவன் தலைவன். எதிரி யாரென்று தெரியாமலேயே கும்மிருட்டில் கம்பு சுழற்றும் காமெடி லொள்ளு. தென்னக கேஜ்ரி


சிட்டுக்குருவி
பிப் 07, 2025 04:29

ஜாதி அரசியலுக்காகமட்டுமே பயன்படுகிறது .மக்கள் முன்னேற்றத்திற்கு அல்ல .அரசியல் வாதிகள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்று யோசிக்கவேண்டும். ஜாதியற்ற சமுதாயம் உருவானால் ஜாதி யொட்டிய கலவரங்கள் /குற்றங்கள் ஒழியலாம் .மக்கள் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 06, 2025 21:48

மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை அதிகாரபூர்வ ஆவணமாக ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருப்பது விஜய் குத் தெரியாது பாவம். நாக்பூர் குடுத்த அறிக்கையை இவர் பெயரில் விட்டிருக்கார்.


BHARATH
பிப் 06, 2025 21:05

ஜோசப்பு... இந்த பசப்பு இங்கே வேண்டாம்.


CECIL KALLADAI
பிப் 06, 2025 20:45

எல்லா ஜாதியையும் கணக்கு எடுத்து அந்த அந்த ஜாதி எண்ணிக்கை அடிப்படையில்இட ஒதுக்கீடு கொடுத்து விடலாம். அப்போதுதான் எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாக இருக்கும்


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 19:58

மதமாற்றம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் அதன் புள்ளைய பத்தி விசாரிக்குறானாம் , இறையன்பு , திருமா, வெற்றிமாறன் ,ரஞ்சித் மாதிரியானவர்கள் எந்த சாதியா இருந்தா என்ன , அவர்கள் வழிபடும் முறையே இப்போ மாறிவிட்டதே,அப்போ மதவாறு கணக்கெடுப்பு தானே நடத்தவேண்டும் ?


m.arunachalam
பிப் 06, 2025 19:45

சினிமா , கிரிக்கெட் மற்றும் ஆட்சியாளர்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மை .


பேசும் தமிழன்
பிப் 06, 2025 19:41

அப்போ ஜாதியை ஒழித்து விட்டோம் என்று இதுவரை கூறியது எல்லாம் பொய்யா கோபால் ???


THAMIZH NENJAM
பிப் 06, 2025 19:33

சாதி எதிர்ப்பவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எதிரானவர்கள். ஒவ்வொரு சாதிக்கும் தனி பண்பாடு கலாச்சாரம் ‌இருக்கும் . சாதியை அழிக்க நினைப்பது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அழிப்பதற்கு சமம்.


Caleb Gabriel
பிப் 06, 2025 19:43

யாரது ஷூத்திரனா?


Karthikeyan Palanisamy
பிப் 06, 2025 19:22

அது உண்மை தான்.. அப்பத்தான் ஒட்டு பிரியும் திமுக ஜெயிக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை