உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய அளவில் தமிழக மாணவர்கள் மீண்டும் பின்தங்கும் நிலை; கல்வியாளர்கள் கருத்து

தேசிய அளவில் தமிழக மாணவர்கள் மீண்டும் பின்தங்கும் நிலை; கல்வியாளர்கள் கருத்து

கோவை: தமிழக அரசு மாநிலக் கல்விக் கொள்கை 2025 நேற்று வெளியானது. இதில், 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி, இருமொழிக் கொள்கை, பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து, கோவை கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகள்:

'போட்டித் தேர்வுகளில் பின்னடைவர்' கல்வியாளர் சோமசுந்தரம்: 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது நல்லதல்ல. ஜே.இ.இ., நீட்., ஐ.சி.ஏ.ஆர்., கிளாட் போன்ற, 70க்கு மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளில், பிளஸ் 1 பாடப்பிரிவுகள், 50 சதவீதம் மற்றும் பிளஸ் 2 பாடப்பிரிவுகள், 50 சதவீதம் என்ற அடிப்படையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. பிளஸ் 1 தேர்வை ரத்து செய்தால், 90 சதவீத தனியார் பள்ளிகள் பிளஸ் 2 பாடங்களை தொடக்கம் முதல் கற்பிக்க தொடங்கிவிடுவர். இதை கட்டுப்படுத்த, மாநிலக் கல்விக் கொள்கையில் எந்த விதமான கண்காணிப்பு விவரமும் குறிப்பிடப்படவில்லை. இதனால், போட்டித்தேர்வுகளில் தமிழ்நாடு மீண்டும் பின்தங்கும். என்.ஐ.டி., ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., கல்லூரிகளில் சேரும், தமிழக மாணவர்களின் விகிதம் குறையக்கூடும். ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் மேல்நிலை மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

'கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்' -

கல்வியாளர் நெடுஞ் செழியன்: பிளஸ் 1 தேர்வை ரத்து செய்தால், பொறியியல் மற்றும் பிற உயர்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் குறையும் வாய்ப்பு உருவாகும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு தயாராக முடியாமல், பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.

' அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு' -

கல்வியாளர் பாலகிருஷ்ணன்: பிளஸ் 1 தேர்வு ரத்து செய்வது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படை அறிவு வளர்ச்சியை பாதிக்கும். போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெறும் எண்ணிக்கையை அதிகரிக்கவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதை ரத்து செய்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். தனியார் பள்ளிகளில் நேரடியாக, பிளஸ் 2 பாடங்களை கற்பிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

SUBBIAH RAMASAMY
ஆக 09, 2025 12:55

இவர்களை எப்படி நிமிர வைப்பது


sundaran manogaran
ஆக 09, 2025 12:48

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமலே இந்தியாவில் கல்வியில் முண்ணணியிலுள்ள தமிழகம் இந்த புதிய கல்வி கொள்கை அமல் படுத்த பட்டால் உலகத்தில் முண்ணனிணிக்குவந்துவிடும்


vbs manian
ஆக 09, 2025 10:19

கழகத்துக்கு தேசியம் என்றால் வேப்பங்காய். அறவே பிடிக்காது. ஆகவே தமிழக மாணவருக்கும் தேசிய தேர்வுகள் வேண்டாம் என்று நினைத்துவிட்டார்கள். பெரிய வரலாற்று பிழை.


தமிழ்வேள்
ஆக 09, 2025 10:01

திருட்டு திமுகவின் அண்ணாதுரை கருணாநிதி வகையறா ஆட்சி அமைத்த நாளிலேயே தமிழகம் நாசமாகப் போய்விட்டது.... ஏற்கனவே நாறி நாசமாகப் போனது எப்படி மீண்டும் மீண்டும் நாசமாகும்.... அழுகிய பழம் சாராயம் ஆவது போல, நாறி நாசமாகப் போன தமிழகம் போதை பவுடரில் சரித்திரம் படைக்கிறது... மீண்டும் மீண்டும் திருட்டு திமுகவுக்கு ஓட்டு போடுங்கோ... தமிழகம் சும்மா ஓஹோன்னு வரும்..


G Mahalingam
ஆக 09, 2025 09:51

இது அரசியல் வாதிகள் அதுவும் திமுகவினர் நடத்தும் கலை கல்லூரிகள் பொறியியல் கல்லூரிருக்கு ஜாக்பாட்.


vbs manian
ஆக 09, 2025 09:51

அரசியல் சித்தாந்தத்தை கல்வியில் புகுத்தும் முயற்சி. கற்கும் வயதில் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவு கற்க வேண்டும். கற்றது வீண் போகாது. மாணவர் எதிர்காலத்தில் சிறிதும் அக்கறை இல்லாத கொள்கை. அப்பாவி மாணவர் விலை கொடுக்கிறார்.


VENKATASUBRAMANIAN
ஆக 09, 2025 07:52

தமிழ மாணவர்களை சிந்திக்க முடியாமல் செயயும் முறை. படிப்பில் அக்கறை இருக்காது திடீரென்று 10 ம் வகுப்பில் தேர்வு என்றால் எப்படி எழுதுவார்கள். இந்த அடிப்படை அறிவு இல்லாத அரசியலவாதிகள். கடவுள்தான தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.


V RAMASWAMY
ஆக 09, 2025 07:50

தமிழக மாணவர்களை பின்னோக்கி அழைத்து செல்லும் கல்விக்கொள்கையும் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் 11ம் வகுப்புக்கு தெரிவில்லை, மற்றும் தரமில்லா பள்ளிகளும் அரசியல் கலந்த கல்வி போதித்தலும் இருக்கும் வரையில் பின்தங்கிக்கொண்டே தானிருக்கும். அவர்கள் புத்திசாலி மாணவர்களை உருவாக்கி எதிர்காலம் நல்லமுறையில் அமைக்க முயல்வதாகத்தெரியவில்லை. மாணவர்களை திராவிட அரசியல்வாதிகளாக ஆக்கும் எண்ணம் போலிருக்கிறது.


Indhuindian
ஆக 09, 2025 05:41

ஓட்டை அல்ல கூட்டத்துக்கு ஆர்பாட்டங்களுக்கு ஆள் கூட்ட இது ஒரு நல்ல யுக்தி


D Natarajan
ஆக 09, 2025 05:39

மிக மோசமான கல்விக்கொள்கை . தமிழத்தின் இருண்ட காலம் . மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. இருமொழிக் கொள்கை அரசு பள்ளிகளுக்கு மட்டும் தானா. 2026 ஒன்று தான் தமிழகத்தை காப்பாற்ற ஒரே வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை