உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அணி சாம்பியன்: தேசிய தடகளத்தில் அசத்தல்

தமிழக அணி சாம்பியன்: தேசிய தடகளத்தில் அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. ஈட்டி எறிதலில் உ.பி.,யின் ரோகித் யாதவ் 83.65 மீ., எறிந்து தங்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா (1.80 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார். 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் தமிழகத்தின் அனுபிரியா (10 நிமிடம், 36.81 வினாடி) வெண்கலம் வென்றார். 10,000மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் லதா (36 நிமிடம், 19.07 வினாடி) வெண்கலம் கைப்பற்றினார். 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் சந்தோஷ், யோகேஷ், ராஜேஷ் ரமேஷ், விஷால் அடங்கிய தமிழக அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 07.53 வினாடியில் கடந்து தங்கத்தை தட்டிச் சென்றது. 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் ஒலிம்பா ஸ்டெபி, தேசிகா, மரியா, வித்யா ராம்ராஜ் அடங்கிய தமிழக அணி (3 நிமிடம், 38.54 வினாடி) வெண்கலம் வென்றது. தமிழக அணி, 195 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

திண்டுக்கல் சரவணன்
ஆக 25, 2025 10:02

மிக்க மகிழ்ச்சி. கேரளாவை மிஞ்சி சாம்பியன் பட்டம் பெறுவது சாதாரண காரியம் அல்ல. வீரர்கள் ஆணையம் தமிழக அரசு என அனைவருக்கும் பாராட்டுக்கு உரியவர்கள்


Vijay
ஆக 25, 2025 07:45

Well done Tamil Nadu.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை