உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக சுற்றுலா பயணிகள் மீட்பு

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக சுற்றுலா பயணிகள் மீட்பு

மூணாறு: மூணாறு அருகே மாங்குளம் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தமிழக சுற்றுலா பயணிகளை பொதுமக்கள் மீட்டனர்.மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் மாங்குளம் பகுதிக்கு ஜீப்பில் சாகச பயணம் செல்வதுண்டு. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியினர் உள்பட மூன்று பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு மூணாறில் இருந்து மாங்குளம் பகுதிக்கு சாகச பயணம் சென்றனர்.மாங்குளம் அருகே பெரும்பன்குத்து பகுதிக்குச் சென்றவர்கள் ஆற்றில் சாகச பயணம் செய்ய முடிவு செய்தனர்.ஜீப்பை டிரைவர் ஆற்றில் இறக்கிய நிலையில் பாறை மோதி சிக்கிக் கொண்டது. அப்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆபத்தான நிலைமையை உணர்ந்த அப்பகுதி மக்கள் கயிறு கட்டி ஜீப் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் தடுத்தனர். பின்னர் கடுமையாக போராடி சுற்றுலா பயணிகளை மீட்டனர். இச்சம்பவத்தால் ஏதேனும் பிரச்னை ஏற்பட கூடும் என எண்ணிய சுற்றுலா பயணிகள் பெயர், ஊர் எதுவும் தெரிவிக்காமல்' எஸ்கேப்' ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை