உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் 5 மருந்துகள் ஆன்லைன் விற்பனை; மத்திய அரசு தடுக்க தமிழகம் வலியுறுத்தல்

பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் 5 மருந்துகள் ஆன்லைன் விற்பனை; மத்திய அரசு தடுக்க தமிழகம் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் ஐந்து மருந்துகளின் இணையவழி விற்பனையை ஒழுங்குபடுத்தாததால், அதன் பயன்பாட்டை தடுப்பது சவாலாக இருப்பதாக, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.இதுகுறித்து, மாநில மருந்து உரிமம் வழங்குதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரைகள் புழக்கத்தை தடுக்க, தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால், அதற்கு அடிமையாக கூடிய திறன் கொண்ட, 'டேபென்டடால், ட்ரெமடால், பென்டாசோசைன், நைட்ராசேபாம், கோடெய்ன்' போன்ற வலி நிவாரண மருந்துகள் இணையவழியில் எளிதில் கிடைக்கின்றன.குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு இணையவழியாக வினியோகிக்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமும், மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இணையவழியாக மற்ற பொருட்களை விற்பனை செய்வதை போல், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. அதை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரம், மாநிலத்திற்கு இல்லை என்பதால், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'அட்டவணை ஹெச் மற்றும் ஹெச் 1ல்' வகைப்படுத்தப்பட்டுள்ள இம்மருந்துகளை, டாக்டரின் பரிந்துரையின்றி, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனரின் கண்காணிப்பு இல்லாமல், விற்பனை செய்வது விதிகளுக்கு புறம்பானாது.சமூக நலன், பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், இதுபோன்ற சட்ட விரோத விற்பனையை ஒழுங்குப்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் முன்வர வேண்டும்.இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை, மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தினால், மாநில அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sundaresan S
மே 21, 2025 14:04

தமிழக அரசு போதை பழக்கத்துக்கு எதிராக மைய அரசுக்கு வைக்கும் கோரிக்கையை வரவேற்போம். உண்மையில் தமிழக அரசுக்கு போதை ஒழிப்பில் அக்கறை இருக்குமானால் டாஸ்மாக்கை முதலில் மூடட்டும்.


இளந்திரையன் வேலந்தாவளம்
மே 21, 2025 11:27

மருந்துக்கள் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம்


vadivelu
மே 21, 2025 10:15

நாம காஷ்மீரத்தில் இருந்து மாணவர்களை மீட்கிறோம், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்டோம், நாமே ஏன் இந்த மருந்துகளை தமிழகத்தில் தடை போட கூடாது.


Anbuselvan
மே 21, 2025 09:08

ஜாபர் சாதிக் அவர்கள் துப்பு கொடுத்து இருப்பார்கள் போலும்


மீனவ நண்பன்
மே 21, 2025 08:17

இந்த லிஸ்டில் மதுவும் சிகரெட்டும் வராதா ?


raja
மே 21, 2025 07:51

ஆமா இந்த மருந்துகள் தான் "சமூக நலன், பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்".... நம்ப திராவிட மாடல் அரசு ஊத்தி கொடுக்கும் டாஸ்மாக் சரக்கு மக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்... நம்பு தமிழா...


Prasad VV
மே 21, 2025 07:41

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை, மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தினால், மாநில அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். .. இப்போவே செய்யலாமே ..


Svs Yaadum oore
மே 21, 2025 07:27

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை, மத்திய அரசு தாமதப்படுத்தினால், மாநில அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்படுமாம் .....இன்னும் என்ன சூழல் ஏற்படனுமாம் ??.. போய் கட்டுப்படுத்துவதை எவன் தடுத்தான் ??.....அதை செய்ய துப்பில்லை ..நகரம் கிராமம் பள்ளி எதிரில் என்று மூட்டு சந்தில் ஊரெங்கும் கஞ்சா விற்பனை ....தெருவுக்கு தெரு டாஸ்மாக் கள்ள சாராயம் .... இதெல்லாம் தடுக்க துப்பில்லை .....ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவுவானுங்க ...


ப்ரியா
மே 21, 2025 07:15

தடுப்பதற்கு ஒண்ணும் உதவலேன்னாலும், தமிழகத்தில்.போதை ஊடுருவிடிச்சுன்னு அண்ணாச்சி முதல் பழனி வரை மாநில அரசை குறை கூற கெளம்பிடுவாங்க.


சிட்டுக்குருவி
மே 21, 2025 06:45

"இணையவழியாக மற்ற பொருட்களை விற்பனை செய்வதை போல், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பது விதி."விதி என்றால் சட்டம்தான் .அந்த விதி படி அரசு நடவடிக்கை எடுக்கலாமே .விதியை மீறினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று சட்டம் இயற்றி மீறுபவர்களை சிறையில் அடையுங்கள் .யார்தடுப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை