உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் பொங்கல் வாழ்த்து

தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் பொங்கல் வாழ்த்து

சென்னை: இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம் என்று த.வெ.க., தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை:பொங்கல் திருநாள்!உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!இவ்வாறு விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

cyber cyber
ஜன 14, 2025 06:45

இவனுக்கும் , சுடலைக்கும் ஒரே ஆளுதான் எழுதி கொடுத்து இருக்கான் போல இருக்கு.


Puratchi Thondan
ஜன 13, 2025 21:36

சமூக நீதிக்கும், சம நீதிக்கும், சமத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்?


m.arunachalam
ஜன 13, 2025 20:45

புது தலைவலி. நம் தலைவிதி. விழித்து கொள்ள வேண்டும் . அடுத்த மேதாவி இவர்.


புதிய வீடியோ