உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் நடைபெற்று வரும் தோல் இல்லா காலணி ஆலை அமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று உளுந்தூர்பேட்டையில் வரவிருக்கும் காலணி ஆலையை நான் பார்வையிட்டேன். PouChen நிறுவனம் உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். உலகளாவிய வரி விதிப்புமற்றும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தமிழகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும். PouChen நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கள்ளக்குறிச்சியில் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தமிழக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பெருமை எனக்குக் கிடைத்தது. இன்றைய இந்த வருகை, அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் மேற்கொள்ளப்பட்ட வேலைகளை காண ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்வில் நைக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்களான உதய் சிங் மேத்தா மற்றும் சாமி வைகுண்டமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஐந்து பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நாம் கொண்டு வரும் ஒவ்வொரு முதலீடும் தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளாக மாறுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கலெக்டர் அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சியில் அனைத்து வசதிகளுடன், அரசின் அனைத்து துறைகளும் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

sundarsvpr
டிச 26, 2025 14:39

தமிழக வாக்காளர்கள் கேவலமானவர்களா அல்லது பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு துணை நிற்கும் என்று கூறும் நபர் கேவலமானவரா? பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு துணை நின்ற விபரம் புள்ளி விபரத்தோடு கூறாதவர் கேவலமானவர். ஆனால் தமிழக வாக்காளர்கள் ஏமாளிகள். காரணம் விபரங்கள் கேட்கும் /பெறும் திறனற்றவர்கள்.


SJRR
டிச 26, 2025 14:37

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் முதல்வரே?


சந்திரன்
டிச 26, 2025 14:28

20000 பேருக்கு வேலை வாய்ப்பு நீயா தந்த அந்த நிறுவனம் தருது சம்பளம் அந்த நிறுவனம் தரபோகுது இதுகூட தெரியாம மக்கள் இருப்பாங்கனு நினைப்பது அறிவீனம்.


Barakat Ali
டிச 26, 2025 14:09

யாரையும் குறை சொல்லாமே என்னால விடியல் தர முடியாது .......


V Venkatachalam, Chennai-87
டிச 26, 2025 14:00

டமில் நாட்டு அரசு ஒரு கண்காட்சி அரசு. முகஸ் வாய்ப்பு தானா கிடைச்சுதுங்குற மாதிரி ஊருட்டுறாரு. உண்மையிலேயே தானாவா கிடைச்சுது? இன்னா உருட்டு? வந்தனோபசார கடைசி படம். உருட்டுகள் பாக்கி இருந்தா எலக்ஷன் தேதி அறிவிக்கும் வரை உருட்டலாம்.


mindum vasantham
டிச 26, 2025 13:57

தமிழக டிராபிக் போலீஸ் டிராபிக் நிர்வகிக்கும் வேலை ஏதும் சேÿயவில்லை அங்கங்கே நின்று கிராமத்து ஏழைகளை, காசு இழந்தவனை பிடித்து வசூல் செய்கின்றனர்


S. Venugopal
டிச 26, 2025 13:56

வரிவிதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டது நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகள் மேலும் பல பண்டகசாலைகள் வரிவிதிப்பால் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளன. தமிழக அரசு நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலைகளுக்கு வரிவிதிப்பில் சில சலுகைகள் வழங்கினால் நன்று


Ram
டிச 26, 2025 13:56

பஸ் டயரை மாத்துங்க முதலில். உயிர்கள் காப்பாற்றப்படும் .


RK
டிச 26, 2025 13:49

தேர்தல் உருட்டு!!!


Palanisamy Sekar
டிச 26, 2025 13:48

சிரிப்பதா அழுவதா... ப்ளீஸ் என்னை நீதான் இவரிடமிருந்து காப்பாத்தணும். பல லட்சம் கோடிக்கு முதலீடு வரும்ன்னு சொல்லி வருஷம் பலவாச்சு. இன்னும் வந்தபாடில்லை. வெறும் 2300 கோடியை வெச்சு அதுல என்னத்த செய்யப்போறாங்க ன்னு தெரியல. இதுல விளம்பரத்துக்கே பல கோடி போயிருக்கும். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிட்டு இடம் கிடைச்சு மைக் கிடைத்த போதும் உடனே மத்திய அரசை குறைகூற வந்துடறாரு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை