உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர் விடுமுறையால் தமிழக மின் தேவை சரிவு

தொடர் விடுமுறையால் தமிழக மின் தேவை சரிவு

சென்னை:தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ளது. இது, கோடை காலத்தில், 20,000 மெகா வாட்டை தாண்டுகிறது. இந்நிலையில், இந்த மாதம், வெயில், அனல் காற்று உள்ளிட்ட காரணங்களால், தினசரி மின் தேவை சராசரியாக, 17,000 மெகா வாட்டாக இருந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை சுதந்திர தினம், நேற்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால், அனைத்து அரசு மற்றும் பல தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை. இதனால், பலரும் விடுமுறையை கொண்டாட, வியாழக் கிழமையே சொந்த ஊருக்கு படையெடுத்தனர். இதையடுத்து, நேற்று மின் தேவை, 3,000 மெகா வாட் அளவு குறைந்து, 14,000 மெகா வாட் என்றளவில் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை