உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ் புத்தாண்டிற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், புத்தாண்டை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என வாழ்த்துவதாக, ஜனாதிபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிதமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். அமிர்தகாலத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் 2047க்கான வளர்ந்த தமிழகத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் புதிய நம்பிக்கையோடு கூடிய உத்வேகம் பிறக்கட்டும். இனிய 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புதிய சாதனைகளைப் படைத்து, புதிய வெற்றிகளைப் பெற்று, வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அன்புமணி உள்பட பலர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துக்கள் வாசகர்களே!

தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். சித்திரை திருநாள் (தமிழ்ப் புத்தாண்டு) என்றால் என்ன? * தமிழ்ப் புத்தாண்டு அன்று, புத்தாடை அணிந்து கோவிலுக்கு செல்வது, பொங்கல் வைத்து வழிபடுவது, உறவினர்களுக்கு இனிப்பு வழங்குவது, பெரியோரிடம் ஆசி பெறுவது வழக்கம்.* தாம்பாளத் தட்டில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பிற பழங்கள், ஒரு எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு, பூக்கள், மஞ்சள், குங்குமம், நகைகள், ரூபாய் நோட்டுக் கட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றை, கடவுள் படத்தின் முன் வைத்துக் கொள்ள வேண்டும். புத்தாண்டு அன்று காலை எழுந்தவுடன், தாம்பாளத் தட்டில் உள்ள கனிகளை பார்த்தபடி கண்விழிக்க வேண்டும்.* அறுசுவை சமையல் செய்து, இறைவனுக்கு படைத்து உண்ண வேண்டும். * வீட்டில் இருக்கும் முதியவர்கள், வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுத்து வாழ்த்துவது வழக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஏப் 14, 2025 07:19

தமிழர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ....


RAMAKRISHNAN NATESAN
ஏப் 14, 2025 09:49

தெலுங்கர்களும் சொல்லலாம்ல ?


Gopal
ஏப் 14, 2025 06:57

இந்த திராவிட அறிவு ஜீவிகள் ஒன்றும் வாய் திறக்கலையை. ஏன்னா அதுங்களுக்கும் தமிழுக்கும் ஒரு இணைப்பும் கிடையாது. கன்றாவி...


Ramesh Sargam
ஏப் 13, 2025 22:08

எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என்று குறைக்கும் ஒரு சில பிராணிகள், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லி குறைக்க மாட்டார்கள்.


raja
ஏப் 14, 2025 03:38

ஆந்திரா ஓங்கோலில் இருந்து கோவால்புரத்துக்கு குடி பெயர்ந்த தெலுங்கு ஆயிற்றே யுகாதிக்கு மட்டும் தான்...


Oru Indiyan
ஏப் 13, 2025 21:42

ஏனுங்க தமிழ்நாடு முதல்வர் முதல்வர் என்று ஒருத்தர் இருப்பாரே அவரு சொன்னாரா தமிழ் புத்தாண்டு வாழ்த்து.. இல்ல அவர் புத்திரன் சொன்னாரா.. சொல்ல மாட்டாங்க. திராவிட புத்தாண்டு தானே இது. தெலுங்கு கன்னடம் மலையாளம் எல்லா மொழி புத்தாண்டும் நாளை தானே.


HoneyBee
ஏப் 13, 2025 22:07

அவரு‌ புனித வெள்ளி கொண்டாட வேளாங்கண்ணி போய் இருப்பாரு. அவரு கிருத்துவ இசுலாமியர்களுக்கு மட்டுமே முதல்வர். இந்துக்களுக்கு இல்லை


முக்கிய வீடியோ