உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழ் ஓதுவார்கள் உள்ளிருப்பு போராட்டம்

 தமிழ் ஓதுவார்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திருமுறை பாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில், தமிழ் ஓதுவார்கள் சங்கத்தினர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கும்பாபிஷேகப் பணிகளின்போது தேவாரம், திருவாசகம் பாடப் போதிய அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அன்னை தமிழுக்கும் திருமுறைகளுக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
செப் 17, 2026 10:46

வைணவத்தில் தமிழ் மறைகளை பாடுவதற்கு ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீமன் நாதமுனிகள் முறையான வரைமுறைகளை செய்து அதன் படி அனைத்து வைணவக் கோவில்களிலும் தமிழ் மறை தொடங்காமல் பூஜைகள் நடப்பதில்லை.


முக்கிய வீடியோ