உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் உலகமொழியாக மாற வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

தமிழ் உலகமொழியாக மாற வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' உலக அரங்கில் தமிழ் மொழி உலக மொழியாகப் பரிணமிக்க வேண்டும்,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.கவர்னர் மாளிகையில் நடைபெற்ற 'எண்ணித் துணிக' - பகுதி 18: உலகத் தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்னர் ரவி பேசியதாவது: உலகின் மிகப் பழமையான வாழும் மொழி தமிழ் ஆகும். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் அதன் இயல்பு சிதைந்தது. கல்வி, தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. தமிழ் ஒரு வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு ஆழமான பண்பாட்டு அடையாளம். ஆங்கிலக் கல்வி முறையால் சமூகக் கட்டமைப்பில் உருவான 'தாழ்வு உணர்வை' ஆங்கிலேயர்களே ஊட்டினார்கள்.திருவள்ளுவரை ஷேக்ஸ்பியருடன் ஒப்பிடுவது தவறு. தாய்மொழி வழிக் கல்வியே எளிதானதும் ஆழமானது. 2023 ஆம் ஆண்டு தாம் தமிழ் கற்கத் தொடங்கிய பிறகு, பொறியியல் மற்றும் மருத்துவப் பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.தமிழைப் பொழுதுபோக்காகக் கருதுவது போதாது; அதனை உலகளவில் பரப்ப வேண்டிய பணி இது. தமிழ் உலகிற்கு வழிகாட்டியாக மாற வேண்டும். தமிழ் ஒரு பொழுதுபோக்கிற்கான மொழி என்பதைத் தாண்டி, உலக அரங்கில் அது ஓர் உலக மொழியாகப் பரிணமிக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சண்முகம்
ஜூன் 16, 2025 00:41

இந்தியாவில் தமிழை ஓரங்கட்டி, உலகில் தமிழ் வளர்ப்பார், கருணாநிதியின் தெலுங்கு நாட்டை சேர்ந்த கவர்னர் ரவி.


V Venkatachalam
ஜூன் 15, 2025 14:36

ஐயா கவர்னர் அவர்களே தமிழ் வியாபாரிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறீர்களே.. இது நியாயமா? தமிழ் மொழி பரீட்சையில் 47000 மாணவர்கள் தோல்வி என்று செய்தி வந்ததுங்களே.‌ தமிழை தமிழ் வியாபாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிச்சிகிட்டே இருக்காங்களே. இப்படி இருக்கும் போது தமிழை உலக மொழி ஆக்குவது இமயமலையில் ஏறும் விஷயமா ஆயிடுமே.


venugopal s
ஜூன் 15, 2025 13:44

இந்தியாவில் மட்டுமே தமிழை அழிப்போம், வேண்டுமானால் மற்ற நாடுகளில் வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறாரோ?


அப்பாவி
ஜூன் 15, 2025 08:38

தமிழ் பல நாடுகளில்.பேசபடுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் அரசு மொழியாகவும் உள்ளது. இவருக்கு தெரியாது. அடிச்சு உடறாரு. இவருக்கு விடியலே தேவலை.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 15, 2025 08:36

தமிழைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்தது போலக் காட்டிக்கொண்டவர்கள் தமிழை வைத்துத்தான் பிழைத்தார்கள் ..... இந்த உண்மையை ஆளுநர் ரவி சுட்டிக்காட்டுகிறாரோ ?


Padmasridharan
ஜூன் 15, 2025 03:53

Gha Dha Bha தமிழ் மொழியில் க த ப "எழுத்துக்கள் வேறு உச்சரிப்பு வேறு". Tamil என்பது சரியல்ல சாமி. thamizh தான் சரி இதை மாற்ற இயலுமா. F க்கு Fbi / PHone இணையான தமிழ் சொல் உண்டா. இவை அறியாமல் உலக மொழி ஆகாதே சாமி. .


தாமரை மலர்கிறது
ஜூன் 15, 2025 02:06

தமிழ் பிரிவினைவாதிகளை தூண்டிவிட கூடாது. தீவிரவாதிகளாக மாறிவிடுவார்கள்.


Priyan Vadanad
ஜூன் 14, 2025 23:55

இவ்வளவுதான் பேசினாரா என்று நம்ப முடியவில்லை.


Priyan Vadanad
ஜூன் 14, 2025 23:53

இவர் தமிழ் பற்றி நல்லதாக பேசினாலே ஏதாவது உள்குத்து வேலை இருக்குமோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இவர் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் றோறோறோறோ.. ம்ப நல்லவராச்சுதே.


Oviya Vijay
ஜூன் 14, 2025 23:25

அதற்கு முதலில் மத்திய அரசின் குடைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்... பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலிலும் உங்கள் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்... அதை விடுத்து ஒவ்வொரு மேடையிலும் பீலா விட்டுக் கொண்டிருக்கக் கூடாது...