உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை

வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை'' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வல்லக்கோட்டை முருகன்கோவில் கும்பாபிஷேகத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சென்றேன். மக்களோடு ஒருவராக காத்திருந்தேன். எந்த இருக்கையும் எனக்கு அளிக்கப்படவில்லை; நான் கேட்கவும் இல்லை. காலதாமதமாக சிலர் அவசரமாக வந்தனர். பக்தர்களாக அல்ல, தன்னுடைய பதவிகளை தோளில் சுமந்து வந்தனர்.உடன் வந்தவர்களும் மேலே ஏற வேண்டும் என்றனர். 'இது அரசியல் மேடை அல்ல' என்று கூறினாலும், எல்லாரும் மேலே ஏறினர். குடமுழுக்கு சிறப்பாக நடந்தது. பெரும் பதவியாளர் வரவில்லை. சிறப்பு வழிக்காக காத்திருந்தார். முருகனும் காத்திருந்தார். பக்தர்களும் காத்திருந்தனர். சிறப்பு கதவு திறக்க சற்று தாமதமானதால் கோபத்துடன் அவர் சென்றுவிட்டார்.அங்கே பக்தியின் வெளிப்பாடு தான் இருந்தது. அதை, ஜாதியின் வெளிப்பாடு என்று தவறாக பிரகடனப்படுத்தி, 'பத்தோடு பதினொன்றாக நான் நிற்க வேண்டுமா' என, பொதுமக்கள் தரிசனத்தையும், ஆணவத்தோடு ரணப்படுத்தி சென்றார்.'பெண்கள் எல்லாம் போகும்போது, நான் போகக்கூடாதா' என்று பெருந்தகை கேட்டிருக்கிறார். ஆக, அங்கு நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை தான். நான் அதை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், நான் அங்கு சென்றது வழிபாட்டுக்கு மட்டுமே. இல்லாத ஒரு பிரச்னையை இருப்பது போல் பெரிதாக்கி, மிக நன்றாக நடந்த குடமுழுக்கை குழப்பி, பக்தர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டனர். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தன்னை கோபுரத்துக்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று புகார் கூறியிருந்தார். இது 2000 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை என்றும் கூறியிருந்தார்.அந்த விழாவில், அவருக்கு முன்னதாகவே வந்திருந்த பா.ஜ., தலைவர் தமிழிசை பங்கேற்று இருந்தார். செல்வப் பெருந்தகை புகார் கூறிய நிலையில் தமிழிசை இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 10, 2025 20:05

எந்த ஒரு பிரச்னைக்கும் ஜாதி ரீதியாக தன்னை மதிக்கவில்லை என்று குட்டையில் குழப்பம் உண்டாக்கும் கட்டுமரம் பாணியில் பெருந்தகை கிளம்பி விட்டார், இவர் பெருந்தகை அல்ல சிறுந்தகை.


venugopal s
ஜூலை 10, 2025 17:45

எந்த அரசியல்வாதியையும் எவ்வளவு அருகில் சென்றாலும் கடவுள் கண் திறந்து பார்க்க மாட்டார்! அதனால் அவர்கள் ஒதுங்கி இருப்பதே நல்லது !


RAAJ68
ஜூலை 10, 2025 16:56

கொலைகாரர்களுக்கு சாமியிடம் என்ன வேலை


Selvaraj Thiroomal
ஜூலை 10, 2025 13:27

எந்த அரசு விழாவானாலும், ஒரு prtocol உண்டுதான். எம் எல் ஏ என்ற முறையில் அவருக்கு முன்னுரிமை, எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி அடிப்படையில் ஒன்று என அடுக்கலாம். நேரம் தவறி வந்திருந்தால், தவறு அவருடையது. மேலே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை, என அரசின் நிர்வாக தவறை, சுட்டி காட்டினால், பாஜகவினர் வரிந்து கட்டிக்கொண்டு பதில் தருவது...


Rathna
ஜூலை 10, 2025 12:33

இறைவன் சன்னதியில் எல்லாரும் சமம். தனது அரசியல், பண பலம், தவறான அதிகாரம் ஆகியவற்றை துண்டை கழற்றி வைப்பது போல் வைத்து விட்டு செல்ல வேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூலை 10, 2025 12:03

பொதுக்கூட்டம், பள்ளியாண்டு விழா க்குத்தான் லேட் என்றால் கோவில் குடமுழுக்கு விழாக்குமா..? தமிழிசை தந்நுள்ள விளக்கம் சொந்தமா எழுதியதுபோல் தெரியலே.


S.V.Srinivasan
ஜூலை 10, 2025 10:56

ரௌடிதனம் பண்றதுக்குன்னே அங்க போயிருக்கான் போல.


veeramani
ஜூலை 10, 2025 10:46

ஒரு சாமான்யனுக்கு சாமிதான் தேவையே ஒழிய சாமரங்கள் தேவையில்லை செல்வப்பெருந்தகையும் பக்தராகதான் சென்டரிக்கவேண்டும் . கோபுர தரிசனம் கோடி புண்ணியமும். ஒவ்வரு இருக்கையில் வயதானவர் கோபுரம் மேல் ஏறி சென்று என்ன சாதிக்கபோகிறார்.


T. சங்கரநாராயணன் ஈரோடு
ஜூலை 10, 2025 09:08

அதான் சேகர்பாபு போய் வருத்தம் தெரிவிச்சுட்டாரே


சின்னசேலம் சிங்காரம்
ஜூலை 10, 2025 09:07

செல்வப் பெருந்தகை சொல்வதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை