உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தாச்சு ராஜ்யசபா தேர்தல்; முட்டி மோதும் குட்டிக்கட்சிகள்!

வந்தாச்சு ராஜ்யசபா தேர்தல்; முட்டி மோதும் குட்டிக்கட்சிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த வில்சன், எம்.சண்முகம், எம்.எம் அப்துல்லா, ம.தி.மு.க.,வின் வைகோ, அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன், பா.ம.க.,வின் அன்புமணி ஆகிய ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b0w5eozm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வேட்புமனு தாக்கல்; ஜூன் 2ம் தேதிவேட்புமனு கடைசி நாள் ; ஜூன் 9ம் தேதிவேட்புமனு பரிசீலனை; ஜூன் 10ம் தேதிவேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ; ஜூன் 12ம் தேதி தேர்தல் ; ஜூன் 19ம் தேதி (அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்)

யார் யாருக்கு?

தமிழகத்தில் தற்போதைய சட்டசபை தொகுதிகளின் நிலவரத்தை பொறுத்து தி.மு.க., கூட்டணிக்கு 4 ராஜ்ய சபா இடங்களும், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரையில், ஏற்கனவே மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சி தலைவர் கமலுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எம்.பி.,யாக இருக்கும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க., சார்பில் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் வில்சனுக்கு மட்டும் மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மற்ற இருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக, கடந்த லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க.,வுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி தங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர்.ஆனால், அப்படி எதுவும் உத்தரவாதம் தரவில்லை என்று அ.தி.மு.க., தரப்பில் கூறி வருகின்றனர். இந்த விவகாரமும் வரும் நாட்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, கடந்த முறை அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு பா.ம.க., அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு மீண்டும் பா.ம.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., முயற்சி மேற்கொண்டுள்ளது. கூட்டணியில் சேருவதற்கான துருப்புச்சீட்டாக, ராஜ்யசபா சீட்டை பா.ம.க., கேட்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.,வில் இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு, எந்த பதவியிலும் இல்லாத மூத்த நிர்வாகிகள் பலர் முயற்சித்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் இரண்டு பிரதான கூட்டணிகளிலும், ராஜ்யசபா சீட் தொடர்பான பேரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
மே 27, 2025 09:08

எது எப்படியோ, பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் சரி தான்!


krishna
மே 27, 2025 16:00

EENA VENGAAYAM BJP VERI PIDITHU ALAYUM KEVALA 200 ROOVAA OOPIS.ULAGA MAHA KEVALAM IVAR.


Kumar Kumzi
மே 28, 2025 08:33

ஓசிகோட்டர் கொத்தடிமை ஆட்சியில் இருப்பதே பிஜேபி தான்


Arinyar Annamalai
மே 26, 2025 23:25

பொட்டி கோவலுக்கு சீட் இல்லையா? கட்சியும் கட்சி தொண்டர்களை அடமானம் வைத்த கமல் பாஷாவுக்கு சீட்டா? அய்யகோ உடன் பருப்பே நீ வெறும் வாழ்க ஒழிக போஸ்டர் ஓட்டுவதற்குத்தானா?


Haja Kuthubdeen
மே 26, 2025 21:43

தேமுதிக..மதிமுக வெல்லாம் வேஸ்ட்...


Gnana Subramani
மே 26, 2025 20:12

அப்படி இருந்தால் நிர்மலா, ஜெய்சங்கர், முருகன், போன்றவர்கள் அமைச்சர் ஆகி இருக்க முடியாது


Kumar Kumzi
மே 28, 2025 08:36

ஓசிகோட்டர் கொத்தடிமை தேர்ந்தெடுக்கப்பட்டது வெளி மாநிலங்களில்


தாமரை மலர்கிறது
மே 26, 2025 19:04

தேமுதிக, மதிமுக, கமல் கட்சி, கம்யூனிஸ்ட் போன்ற சுண்டைக்காய்கட்சிகளை ஒடுக்கி வைப்பது நல்லது.


என்றும் இந்தியன்
மே 26, 2025 16:57

முட்டி மோதும் குட்டிக்கட்சிகள்???இல்லை முட்டி மோதும் குட்டிகள் நிரைந்த கட்சிகளா???


sundaram
மே 26, 2025 16:42

திரைமறைவு பிரச்சாரகர் பெயரை " பர்வீன் சுல்தானா " என்று எழுதுவதற்கு பதிலாக பாரதி பாஸ்கர் என்று தட்டச்சு செய்து விட்டார் என்று நினைக்கிறேன்...


சுந்தரம் விஸ்வநாதன்
மே 26, 2025 20:26

இல்லை நண்பரே, பாரதி வங்கிப் பணியில் இருந்து விலக்கியபோதே அவர் கழகத்தில் இணைவார் என்றுதான் தகவல்கள் வந்தன .அப்போது கொடுத்த வாக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவி,


N Srinivasan
மே 26, 2025 16:34

சட்டம் கொண்டு வர வேண்டும் ஒருவன் MLA ஆகா வேண்டுமானால் குறைத்தபட்சம் 5 வருடம் councillor ஆக இருந்திருக்கவேண்டும் MP ஆகா வேண்டுமானால் 5 வருடம் MLA ஆகா இருந்திருக்கவேண்டும் என்று


நசி
மே 26, 2025 16:04

கமலகாசன் பிரப்பால் பிராமணர் வளர்ப்பால் திராவிடியா வில்சன்‌ மிஷனரி மற்றும்‌ வெற்றிகரமான வக்கீல் பாரதி பாஸ்கார்‌. பிராமணர்‌ஆன்மீகவாதி ..சேகர்‌பாபு ஆதரவில்லை எப்படி‌ ஆக முடியும் சிவாஜி கிருஷ்னமுர்தி ஆகலாம்


RAJ
மே 26, 2025 14:52

ஒரு அழுகின ஊத்தப்பம் பார்ஸல்லுஉஉஉ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை