உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 3 மாவட்டம்... நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்.,2) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்; நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது வடக்கு - வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடலோரப் பகுதிகளில் கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இன்று இரவு கரையைக் கடக்கும். இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று (அக்.,2) கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, அடுத்த 6 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை விபரங்களை காணலாம்.நாளை (அக்.,3); காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகியோ 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஅக்.,4 ; திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அக்., 5; திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்அக்.,6; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அக்.,7 மற்றும் 8ம் தேதி; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.இன்று முதல் 6ம் தேதி வரையில் அரபிக்கடலில் சில குறிப்பிட்ட திசைகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mahalingamssva
அக் 02, 2025 14:55

இந்த பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் இல்லை, ஆனால் வெயில் தாங்கலை. தினசரி கடுமையான தாக்கம். தெளிவான தங்களின் செய்திக்காக நன்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை