வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்லார் ஒருவர் உண்டு எனில் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
மேலும் செய்திகள்
தமிழகத்தில் அதிகபட்ச மழை எங்கே? இதோ முழு விபரம்!
12-Mar-2025
17 மாவட்டங்களில் இன்று கனமழை
04-Apr-2025
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது.தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. அனலுடன் கூடிய காற்றால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pojd5cuj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல மணிநேரம் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கரட்டூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை தொடர்ந்து நீடித்ததால் அங்கு சிலமணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது. திடீர் மழையால் வெப்பம் தணிய, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சூறாவளியுடன் மழை கொட்டியதில் அங்குள்ள சில கடைகளின் பெயர் பலகைகள், தகர ஷீட்டுகள் காற்றில் பறந்தன. மின்சார விநியோகமும் சிறிதுநேரம் தடைபட்டது.தேனி மாவட்டம் கம்பம், திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோவையில் புறநகர் பகுதியில் மழை கொட்டியதில் ஆங்காங்கே மரங்களின் கிளைகளும் ஒடிந்து விழுந்தன.தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் (மில்லி மீட்டரில்)ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் 155.2 எலந்த குட்டை மேடு 100.4கவுந்தப்பாடி 91.4 நம்பியூர் 79 கொடிவேரி 52.2 வரட்டு பள்ளம் 51.2 அம்மாபேட்டை 50.6 பவானிசாகர் 39.4 சென்னிமலை 39 குண்டேரி பள்ளம் 29.4 சத்தியமங்கலம் 23 பவானி 19கன்னியாகுமரி மாவட்டம்
கோழிப்போர்விளை 195 அடையாமடை 128.4 பேச்சுப்பாறை 125.4 குளச்சல் 104 இரணியல் 74 சுருளக்கோடு 61.4 சித்தார் 60.2 மாம்பழத்துறையாறு 57 ஆனைக்கிடங்கு 55.6 தக்கலை 49 பாலாமூர் 38 பெருஞ்சாணி 37.6 குழித்துறை 32.4 கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை 36 தளி 20ராமநாதபுரம் மாவட்டம்
ராமேஸ்வரம் 65.4 கடலாடி 52 முதுகுளத்தூர் 23 பாம்பன் 22தேனி மாவட்டம்
சேத்துப்பாறை 86பெரியகுளம் 61உத்தமபாளையம் 54.6 மஞ்சளாறு 43 ஆண்டிபட்டி 43திருப்பூர் மாவட்டம்
கலெக்டர் முகாம் அலுவலகம் 150 கலெக்டர் அலுவலகம் 131 ஊத்துக்குளி 120 வடக்கு தாலுகா அலுவலகம் 110 தெற்கு தாலுகா அலுவலகம் 96 அவிநாசி 75 பல்லடம் 28 திருமூர்த்தி அணை 25கோவை மாவட்டம்
பீளமேடு விமான நிலையம் 78.6 சூலூர் 76.4 அன்னூர் 75.2 வேளாண் பல்கலை 69 பெரியநாயக்கன்பாளையம் 62.4 போத்தனூர் 54 தொண்டாமுத்தூர் 48 சின்கோனா 37 மதுக்கரை 33 வாரப்பட்டி 33 சின்னக்கல்லார் 26 சிறுவாணி அடிவாரம் 22 தெற்கு தாலுக்கா ஆபீஸ் 21.2 மாக்கினாம்பட்டி 19.5தென்காசி மாவட்டம்
ராமநதி அணை 65 கடனா அணை 62 செங்கோட்டை 46.4 குண்டாறு அணை 32 அடவி நைனார் கோவில் அணை 15நீலகிரி மாவட்டம்
கீழ்கோத்தகிரி எஸ்டேட் 90 நடுவட்டம் 64 பார்வுட் 54 கிண்ணக்கொரை 42 கிளன்மார்கன் 41 குந்தா பாலம் 40 ஊட்டி 38 கொடநாடு 38 எமரால்டு 35 அப்பர் பவானி 30 அப்பர் கூடலூர் 25 கோத்தகிரி 24தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை 36 ஸ்ரீவைகுண்டம் 21திருநெல்வேலி மாவட்டம்
ஊத்து 68 நம்பியார் அணை 68 நாலு முக்கு 58 கக்கச்சி 54பாபநாசம் 49 மாஞ்சோலை 48 சேர்வலார் அணை 47 மணிமுத்தாறு 32.4 கொடுமுடியாறு அணை 27 அம்பாசமுத்திரம் 11.8திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் 42.6 வேம்பாக்கம் 25 செய்யாறு 18விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு 39 ஸ்ரீவில்லிபுத்தூர் 12.2 சாத்தூர் 11தர்மபுரி மாவட்டம்
ஒகேனக்கல் 48 மாரண்டஹள்ளி 12 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் 62.5 கொடைக்கானல் படகு இல்லம் 26.6 கொடைக்கானல் 14.5மதுரை மாவட்டம்
ஆண்டிப்பட்டி 39 சோழவந்தான் 25 வாடிப்பட்டி 20 சிவகங்கை மாவட்டம் சிவகங்கை 27.6
நல்லார் ஒருவர் உண்டு எனில் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
12-Mar-2025
04-Apr-2025