உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் விலகல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் விலகல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது.தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lqxe2mo7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம்' என, அமலாக்கத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை என டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையை நீதிபதிகள் கண்டித்தனர்.இந்நிலையில், இன்று (மார்ச் 25) அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 96 )

Bhakt
மார் 26, 2025 03:18

They should be subject to inquiry.


C.ponnusamy
மார் 25, 2025 22:31

நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் அரசு துறை நீதி துறை காவல்துறை மூன்றும் நேர்மையாக இருக்க வேண்டும்.அது இல்லையே இந்த நாட்டில். உப்பு க்கு வரி செலுத்த போராட்டம் நடத்திய நாட்டில் இட்லி காஃபி சாப்பிட்டு வரி கட்ட வேண்டிய நாம் எதைப்பற்றியும் கவலை படக்கூடாது.


Anand
மார் 25, 2025 21:50

நீதிபதிகள் திமுக க்கு பயப்பட மாட்டார்கள் ஒன்றிய அரசுக்கு தான் ,பதவி உயர்வுக்காக மோடி அரசாங்கம் அழுத்தம் கொடுத்து இருக்கும் திமுக மேல் உள்ள வழக்கு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என டெல்லி போல 2026 இல் ஜெயிக்க வேண்டும் என்று என்ன செய்தாலும் ஒரு இடம் ஜெயிக்காது தமிழர்கள் வடக்கனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஜெயலலிதா தண்டனை பெற்ற பிறகு கூட வெற்றி பெற்றார்


Siva Balan
மார் 25, 2025 23:44

நீதிபதிகளுக்கு உயிர்பயம் வந்திருக்கும். திராவிட மாடல் ஆட்சின்னா சும்மாவா....


Ganapathy Subramanian
மார் 27, 2025 10:06

இருவரில் ஒருவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்பது தெரியுமா? அவருடைய சீனியர் தற்போது திமுக அரசினால் நியமிக்கப்பட்டுள்ள அட்வகேட் ஜெனரல் திரு சண்முகநாதன் என்பது தெரியுமா?


Narayanan
ஏப் 01, 2025 11:51

தவறு . நீதிபதிகள் திமுக போட்ட பிச்சையில் வந்தவர்கள் என்று ஆர் . எஸ் . பாரதி சொன்னதை நினைவுபடுத்துகிறேன் , எதெற்கெடுத்தாலும் மத்திய அரசையே குறைசொல்லும் நமது பழக்கத்தை மாற்றிக்கொள்வோமே


Narayanan
ஏப் 01, 2025 12:10

இன்று தமிழக அனைத்து தொழில்களிலும் வடக்கத்தவர்கள்தான் இருக்கிறார்கள்.அவர்கள் இல்லையே எந்த வேலையும் நடக்காது என்ற நிலை. இன்று ஆட்டோகூட ஓட்டுகிறார்கள் .


Appa V
மார் 25, 2025 21:39

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த அவலத்தை பார்த்து இந்த முடிவா ?


Bhakt
மார் 26, 2025 03:16

டில்லி நீதிபதி வீட்டில் சாக்கு மூட்டைக்குள் இருந்த பாவ மூட்டை பணம் தீ விபத்தினால் கருகியது மட்டுமல்லாமல் அவர் வழங்கிய நீதிகளின் அதர்மத்தை காட்டி கொடுத்தது....அதனால் வந்த ஜுரம்/பயம்.


sankaranarayanan
மார் 25, 2025 21:11

டாஸ்மார்க் முறைகேடு புதுதில்லியில் நடந்ததை போன்று பூதாகாரமாக போக போகிறது என்று தெரிந்து அரசுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வேண்டிய நிர்பந்தம் வரும் என்று நினைத்து இது போன்ற பயந்த நீதிபதிகள் நீதி மன்றத்தில் இருந்தால் என்ன இருக்காவிட்டால் என்ன? மக்களுக்கு எந்த பயனும் இல்லை. துணிந்து தப்பு என்று சொல்ல தைரியம் இல்லாத தொடை நடுங்கி நீதிபதிகளை நீதி மன்றத்திலிருந்தே அகற்ற வேண்டும்.நீதியை தைரியமாக கடைபிடிப்பவர்களையே நீதிபதிகளாக அமர்த்தவேண்டும்ம்.


Nagarajan S
மார் 25, 2025 20:42

திமுகவினரின் ஒவ்வொரு வழக்கிலிருந்தும் நீதிபதிகள் ஏன் தாங்களாகவே விலகி கொள்கிறார்கள்? மிரட்டலா? அல்லது பயமா?


Subash BV
மார் 25, 2025 19:52

Tamil political thieves be smart. TAMILS BE ALERT. PUT TAMIZAGAM FIRST


Selvaraj
மார் 25, 2025 19:41

வழக்கிலிருந்து மட்டும் ஏன் விலக வேண்டும். நீதிபதி பதவியிலிருந்தே விலக்க வேண்டும்.. ?


spr
மார் 25, 2025 19:27

வழக்கு விசாரணை தொடங்கிய பின் அதனை காலதாமதம் செய்த பின்னர் விலகுவது பாராளுமன்றம் சட்ட மாற்றத்தில் எதிர்க்கட்சிகள் சபை தொடங்கிய பின் வெளி நடப்பு செய்து எந்த மசோதாவையும் விவாதிக்காமல் ஆளும் அரசு சட்டமாக்க உதவுவது போல. விசாரணை தொடங்கு முன்னரே விலகியிருக்க வேண்டியதுதானே. பேரம் படிந்து விட்டதோ இல்லை பயமா இல்லை தாமரை - சூரியன் நட்பு உறுதியாக மத்திய அரசுக்கு மறைமுக ஆதரவு தர கழகத் தலைமை விரும்பியதால் வழக்கம் போல மத்திய அரசு விசாரணைத் துறையின் கழுத்தைப் பிடிக்கிறதா


sankaranarayanan
மார் 25, 2025 19:26

இது போன்று நீதிபதிகள் ஒருவாரம் கழித்து கூறுவதற்கு அவர்களுக்கு சம்பளம் எதற்கு மக்கள் வரியிலிருந்து கொடுக்க வேண்டும் ? அவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கொடுத்த வேலையை செய்ய முடியாது என்று சொன்னால் எந்த இடத்தில் இவர்களை ஏற்பார்கள். பதவியை விட்டு வெளியே தள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள். ஒழுங்காக அவர்களுக்கு கொடுத்த வழக்குகளை அலசி ஆராயாய்ந்து தீர்ப்பு கொடுக்க முடியாத நீதிபதிகள் நீதிபதிகளை நீதிமன்றத்தில் இருந்தே அகற்றி விடுங்கள். சாதாரண மக்களை அங்கே அமர வையுங்கள். இது மக்கள் வரிப்பணம்.வீணாடிக்கக்கூடாது


முக்கிய வீடியோ