உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!

டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: * கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.2,488 கோடி அதிகரித்துள்ளது. அதாவது, 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,344 கோடி ஆக இருந்தது.* கடந்த 2023-24ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45,856 கோடியாக இருந்தது. * 2022 - 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 - 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

S.V.Srinivasan
ஏப் 23, 2025 08:26

குடிச்சு சீரழிஞ்ச குடும்பங்களின் சாபம் இவர்களை சும்மா விடாது.


தமிழன்
ஏப் 22, 2025 21:22

எத்தனை குடும்பத்தை நாசமாக்கி இந்த வருமானம் அத்தனை குடும்பத்தின் சாபமும் ஆட்சியாளர்களின் குடும்பங்களை நிச்சயமாக நாசமாக்கும் என சாபம் விடுகிறோம்.


ப.சாமி
ஏப் 22, 2025 19:59

4,83,44,00,000 கோடி டாஸ்மாக் வருமானம்.குறைந்தபட்சம் குவார்ட்டர்140 ரூபாய். 4,83,44,00,000 ÷ 140 =3,45,31,428 பாட்டில்கள். ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை 10 ரூபாய்.வாங்கப்படுகிறது.அதாவது 3,45,31,428 ×10=34,53,14,280 ரூபாய் எங்கே செல்கிறது? கணக்கு தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளவும்..


Ragupathi
ஏப் 22, 2025 19:42

கணக்குல வந்ததே இவ்வளவுன்னா கணக்குல வராம இருமடங்கு இருக்கும். மொத்த பணத்தையும் அரசாங்கமே புடுங்கிக்கும் போல இருக்கே.


Rajarajan
ஏப் 22, 2025 18:55

இந்த வருவாயை நம்பி அரசு இல்லை என்கின்றனர். சரி, அப்படியானால், இந்த ஒட்டுமொத்த வருவாய் எங்கு செல்கிறது ?


Senthoora
ஏப் 22, 2025 18:19

இங்கே கருத்து எழுதும் வாசகர்கள், மது அருந்தாதவர்கள் என்று சொல்லுங்க. இந்த வருமானத்தில் மத்திய அரசுக்கு எத்தனை வீதம் போகுது என்று தெரியுமா? மத்திய அரசுக்கு வரி போகும் வரை, மாநில அரசை குற்றம் சொல்லி ஒன்னும் நடக்காது.


என்றும் இந்தியன்
ஏப் 22, 2025 17:31

Recognising the market for IMFL sales, some states like Kerala and Tamil Nadu have prohibited private parties from owning liquor stores, making the state government the sole retailer of alcohol within their territories. அதாவது அரசே மது வியாபாரம் செய்கின்றது ஆகவே தமிழ்நாடு என்னும் பெயர் இனிமேல் தமிழ் மது நாடு என்று மாற்றம் செய்யப்படுகின்றது


Vasan
ஏப் 22, 2025 17:25

How many families in Tamilnadu came to cross road நடுத்தெரு because of TASMAC. Why Govt is doing this?


உண்மை கசக்கும்
ஏப் 22, 2025 16:55

வருவாய் கணக்கில் எத்தனை கோடி பதுக்கப்பட்டதோ. சரி. இந்த வருமானத்தில் எம்புட்டு செலவு. நிகர லாபம் எவ்வளவு.. தெளிவா சொல்லுங்க


Svs Yaadum oore
ஏப் 22, 2025 15:43

சாராய கார்பொரேட் கம்பெனி நடத்துபவனெல்லாம் திராவிடனுங்க ஆட்சியில் மந்திரி ....ஐந்து ரூபாய் கூட மதிப்பில்லாத மட்டமான சாராயம் டாஸ்மாக்கில் 25 ரூபாய்க்கு விற்கிறான் ....விரைவில் 48,344 கோடி வருவாய் என்பதிலிருந்து நான்கு லட்சம் கோடிகளாக டாஸ்மாக் வருமானம் திராவிட வளர்ச்சி பெறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை