வாசகர்கள் கருத்துகள் ( 37 )
இப்போ இத்தினி வருஷமா நீங்க செய்தது வரிசுமைதான் என நீங்க ஒத்துக்கிட்டதை பார்க்கும்போது, நீங்க தைரியசாலி தான்.
என்னமோ மத்தவனுங்க GST போட்டு மக்களை சுரண்டியதுபோலவும், அதை இந்தம்மாவும் ஜியும் சேர்ந்து ஒழிச்சுக்கட்டுனது போலவும் ப்ப்பா, என்னமா டிராமா பண்ணுறாங்க...
சுத்த பிதற்றல் . ஒவ்வொரு பொருளுக்கும் தயாரிக்க ஆகும் செலவை விட இருமடங்குக்கு மேல் 100 கோடி மக்களிடமும் கொள்ளையடிக்கப்படுகிறது. இப்படி ஒரு கொள்ளை கொடூரம் இந்திய வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை
அரசியல்வாதிகள் ராஜ வாழ்க்கை வாழ மக்களின் வரிப்பணமே காரணம் .........
இலங்கை, பாகிஸ்தான் மியன்மர் நாட்டை போன்று இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாய்க்கு சென்றுவிட்டது.
பிஜேபி அதிமுக திமுக போன்ற கட்சிகளை மக்கள் ஒதுக்க வேண்டும். மக்கள் நலன் கொண்ட நபர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். மாற வேண்டியது மக்கள் தான். இனாமிற்கு வோட்டை செலுத்தி நாசமானது தான் மிச்சம்
ஊறுகாய் விலை இன்னும் ரொம்ப அதிகம் தான்
GST கொண்டுவரப்பட்டபோது அது பல வரிகளை - உற்பத்தி வரி, விற்பனை வரி, octroi வரி, போன்ற வரிகளின் கூட்டு தொகையாகவே கொண்டு வரப்பட்டது. இதில் மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்ததால் தான் வந்தது. GST கூட்டமைப்பு என்பது அனைத்து மாநில அமைச்சர்களின் சம்மதத்திற்கு பின்னரே கொண்டு வர முடியும். மத்திய அமைச்சர் அதில் ஒரு உறுப்பினர் மட்டுமே. ஒவ்வரு மாநில நிதி துறை, வணிக வரி துறை செயலரும், ஒரு புது வரியால் தன் மாநிலத்திற்கு என்ன வருவாய், என்ன செலவு என்று கணக்கு போட்டு நிதி அமைச்சரிடம் தெரிவித்து, முதலமைச்சர் ஒப்புதல் வாங்கி தான் ஒரு புது வரி வருகிறது அல்லது எடுக்கப்படுகிறது. இதை விட கேவலம் சில மாநிலங்களில் சாதாரண வீடு உபயோக பொருட்களின் மீது வரிகள் கிட்டதட்ட 30% மேலே இருந்தது. 100 ரூபாய்க்கு விற்றால் 30 ரூபாய் வரி கட்டும் நிலை. பிரணாப் முகர்ஜீ நிதி அமைச்சராக இருந்த போது முகத்திற்கு போடும் பௌடருக்கு 125% வரி இருந்தது. அதை கேட்க போன ஒரு தொழில் அதிபரிடம் அமைச்சர் பெண்கள் முகத்திற்கு பவுடர் எதற்கு போட வேண்டும் என்று கேட்டார்? இதை போல பல உதாரணங்கள் சொல்லலாம்.
எங்கிருந்தோ வந்தாள் என்று பழைய திரைப்படம் ஒன்று தமிழில் உண்டு. சிவாஜிகணேசன் மற்றும் ஜெயலலிதா அதில் நடித்திருப்பார்கள்... அதில் கவிதை வடிவில் வரும் சில வரிகள் என்னவென்றால், ஏற்றி வைத்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்து நின்று, பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ... இந்நேரத்தில் இவ்வரிகள் என் மனதில் தோன்றக் காரணம்... மக்களை வருத்தும் வகையில் அனைத்து விதமான வரிகளையும் தாறுமாறாக ஏற்றிவிட்டு இந்த நிம்மி மா.மி சிறுகுறுந் தொழில்கள் நலிவடைவதை எல்லாம் கண்குளிரப் பார்த்து மகிழ்ந்து, மக்கள் பட்ட துயரங்களையும் கதறல்களையும் இவ்வளவு காலம் பாராமல் இருந்து விட்டு இப்போது சொந்தக் கட்சியினரே காறி உமிழ்ந்தவுடன் திடீரென ஞானோதயம் வந்து விட்டது போல் வரிக்குறைப்பை அறிவித்திருக்கிறார்... காப்பீட்டு திட்டங்களுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரி விதிப்பது தவறானது என சொந்தக் கட்சியைச் சேர்ந்த நிதின் கட்காரி மட்டும் கூறியிருக்காவிட்டால் இன்றைக்கு இந்த அம்மையார் அதை நீக்கியிருப்பாரா என்ன... இப்போது மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று இவர்கள் பேசும் பேச்சில் மறைமுகமாக பொதிந்துள்ள மற்றொரு அர்த்தம் இவ்வளவு காலம் மக்கள் மீது வரிச்சுமை இருந்துள்ளது என்பது தானே... அவ்வாறு ஏன் சுமத்தினீர்கள் என்று எதிர்க் கேள்வி கேட்டால் அதற்கு பதில் இவர்களிடம் இருக்கப்போவதில்லை... புறவாசல் வழியே பதவி சுகம் பெறும் இவரைப் போன்றோருக்கு, ஒருமுறை நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நான் ஆனியன் சாப்பிடுவதில்லை என்று மக்கள் படும் துயரங்களைக் கருத்தில் கொள்ளாமல் நக்கலாகப் பதிலளித்துவிட்டுச் செல்லும் இவருக்கு மக்கள் பாடம் புகட்டத் தகுந்த தருணம் வந்தே தீரும்...
அப்ப இதுக்கு முன்னால வரிச்சுமை இருந்துள்ளது. அந்த சுமையால் தேசத்திற்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன?