உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் தற்செயல் விடுப்பு போராட்டம்; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஆசிரியர் தற்செயல் விடுப்பு போராட்டம்; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று நடத்திய தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டதால், ஏராளமான தொடக்கப்பள்ளிகள் செயல்படவில்லை என்று தெரியவந்துள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, இன்று 25ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி தமிழகத்தில் இன்று அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் பல, தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க கல்வித்துறையில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 239 ஆசிரியர்களில், 53 ஆயிரத்து 166 பேர் தற்செயல் விடுப்பில் இருந்தனர். அரசு கணக்கின்படி 2779 பள்ளிகள் செயல்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lu7qz2el&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அரசு ஊழியர் சங்கங்கள் பலமுடன் இருக்கும் துறைகளிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடந்தது. தேர்தலை முன்னிட்டு, ஆசிரியர், அரசு ஊழியர் தொடங்கியுள்ள போராட்டத்தால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
பிப் 26, 2025 06:50

8 மணி நேரத்துக்கு பதிலாக 18 மணி நேரம் சொல்லிக்கொடுத்தால் பாராட்டி இருக்கலாம் - ஆனால் இது போல பொறுப்பில்லாமல் விடுப்பு எடுத்தது கண்டனத்துக்கு உரியது.


aaruthirumalai
பிப் 25, 2025 23:50

குற்ற உணர்ச்சி இல்லாத மனிதர்கள் இப்பொழுது ஆசிரியர்களாக உள்ளார்கள். மனசாட்சியும் கிடையாது என்னத்த சொல்ல.


J.Isaac
பிப் 25, 2025 22:44

நிரந்தரமாக கொடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Jay
பிப் 25, 2025 21:11

தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் இறுதி கட்டத்தில் தான் இப்படிப்பட்ட இரக்கமற்ற போராட்டங்களை நடத்தி சம்பள உயர்வு கேட்க முடியும்.


தத்வமசி
பிப் 25, 2025 19:41

இவர்கள் ஆசிரியர் பணிக்கு வந்தவர்களா ? இல்லை ஆளும் அரசை மிரட்டி தனக்கு சம்பளம் பெறுபவர்களா ? இவர்களுக்கு இடம் கொடுத்தது திமுக. இப்போது அதுவே ஒவ்வொரு முறையும் தேர்தல் வருவதற்கு முன் மிரட்டி ஆளும் அரசை பணிய வைக்க வேண்டியது. அரசு ஊழியர்கள் ஓட்டு போடக் கூடாது என்கிற சட்டம் வர வேண்டும். மாணவர்களின் நிலைமை பாவம்.


Amar Akbar Antony
பிப் 25, 2025 19:36

இவர்கள் ஒரு பொருளாதார தீவிரவாதிகள் என்று சொல்லலாமா?


Bye Pass
பிப் 25, 2025 19:11

தவறாக சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக சம்பளம் தரக்கூடாது ..


முருகன்
பிப் 25, 2025 19:04

நாட்டில் தனியார் ஆசிரியர்கள் பலருக்கு இவர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் கிடைக்கிறது இவர்கள் மேலும் மேலும் வேண்டி போராட்டம் நடத்துவது ஏன்?


sridhar
பிப் 25, 2025 18:48

அரசு ஊழியர்கள் சங்கம் அமைத்து அதன் மூலம் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வது கயமை .


முக்கிய வீடியோ