உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அண்ணா பல்கலை துணைவேந்தர் எச்சரிக்கை

முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அண்ணா பல்கலை துணைவேந்தர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீதும், கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மை தான். 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,500 பேர் பணியாற்றுகின்றனர். மீதம் உள்ள 2 ஆயிரம் இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாக பணியாற்றுகின்றனர். இவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் கண்டறியப்பட்ட உள்ளது. பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை கண்டறிய நேற்றே குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dinesh Kumar
ஜூலை 24, 2024 21:11

நிச்சயமாக உங்களால் எதுவும் செய்வ முடியாது. 90 சதவீத சுயநிதி கல்லூரிகளில் 70 சதவீத ஆசிரியர்களே உள்ளனர். இது பொறியியல் கல்லூரிகளில் சம்பந்த பட்ட அனைவருக்குமே தெரியும். மாணவர்கள் உட்பட.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 24, 2024 18:48

முறைகேடாக ஆசிரியர்களை பணியில் சேர்த்தவர்கள் மீது என்ன நடவடிக்கை, எப்போது எடுப்பீர்கள்? அந்த தகுதியற்ற ஆசிரியர்களால் கல்வி பாழான பல்லாயிரம் மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?


karupanasamy
ஜூலை 24, 2024 17:50

கழக இருக்கக்கூடும்.


Anantharaman Srinivasan
ஜூலை 24, 2024 14:12

ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் பணியிலிருந்தது கண்டறியப்பட்ட உள்ளது. அந்த கல்லூரி முதல்வர்கள் அந்த பேராசிரியர் விவரங்களை ஏன் verify பண்ணவில்லை. இந்த விவகாரம் இப்போ எப்படி வெளியில் தெரிந்தது. So ஆதார் கார்டும் வேஸ்ட்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி