உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 தமிழ் பாடத்தில் 1 மதிப்பெண் கேள்விகளை அதிகரிக்க வலியுறுத்தல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பிளஸ் 2 தமிழ் பாடத்தில் 1 மதிப்பெண் கேள்விகளை அதிகரிக்க வலியுறுத்தல் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை:'பிளஸ் 2 தமிழ் பாடத்தில், ஒரு மதிப்பெண் கேள்விகள் எண்ணிக்கையை, 20 ஆக உயர்த்த வேண்டும்' என, அரசு தேர்வுகள் இயக்குநரிடம், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள் நேற்று, அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலாவை சந்தித்தனர். அப்போது, தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனு அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது: பிளஸ் 2 தமிழ் பாட பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர் பலர் தேர்ச்சி பெறாத நிலை இருக்கிறது. இதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக ஒரு மதிப்பெண் கேள்விகள் உள்ளன. தற்போது, தமிழ் பாட பொது தேர்வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், 14 கேட்கப்படுகின்றன. பகுதி 3, பிரிவு 3ல் உள்ள, 6 மதிப்பெண்களுக்கான தமிழாக்கம் பகுதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக, கூடு தலாக, 6 ஒரு மதிப்பெண் கேள்விகள் சேர்த்து, அந்த எண்ணிக்கையை, 20 ஆக மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மாணவர்கள் விடையளிக்கும்போது, தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை